கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதால் ஏகப்பட்ட உயிர்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டதாக குறை கூறிக்கொண்டிருந்த ஸ்டாலின் அதேபோல் அதிகாலை நேரத்தில் சாத்தனூர் அணையைத் திறந்து மக்களை தவிக்க விட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சென்னையில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று முதல்வர் ஸ்டாலின்  துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் சென்னையிலே சுற்றிச்சுற்றி வந்தார்கள். ஆனால், பாண்டிச்சேரியில் நிலை கொண்டிருந்த புயல் கடலூர், கள்ளக்குறிச்சியில் தன்னுடைய வீரியத்தைக் காட்டிவிட்டுப் போய்விட்டது. தொடர்ந்து சாத்தனூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்த காரணத்தால் அணை திறக்கப்பட்டு 1.70 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியிருக்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், ‘செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க முறையாக கூட்டம் நடத்தி, ஆலோசித்து, அதன்பின் திறந்துவிட்ட போதே, முன் அறிவிப்பின்றி திறந்துவிட்டதாக பொய்களை பரப்பிய திமுக, இன்று ஆட்சிக்கு வந்த பின், நள்ளிரவு 1.30 மணிக்கு சாத்தனூர் அணையை முன்னெச்சரிக்கை அறிவிப்பின்றி திறந்துவிட்டிருக்கிறது. இதுதான் மக்கள் மீது அக்கறை கொண்ட அரசா?

நள்ளிரவு 1.30 மணிக்கு சாத்தனூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அடுத்த சில மணி நேரங்களில் 4 மாவட்டங்களில் பேரழிவு ஏற்படுத்தியிருக்கிறது. நள்ளிரவு திறக்கப்பட்டதால் அப்பாவி மக்களுக்கு வீட்டுக்குள் தண்ணீர் புகுந்த பிறகுதான் நிலவரம் தெரியவந்திருக்கிறது. உயிர் தப்பினால் போதும் என்ற எண்ணத்தில் அனைவரும் வீட்டை விட்டு ஓடியிருக்கிறார்கள். பல கிராமங்களுக்கு இன்னமும் மீட்புக் குழு செல்ல முடியவில்லை. உயிர் சேதம் குறித்தும் சரியான தகால் இல்லை.

கடலூர் மாவட்டத்தின் ஆற்றின் கரையில் 90 சதவீத வீடுகள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஏகப்பட்ட ரோடுகள் மூடப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லை. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரம் ஏக்கர் பயிர் நாசமடைந்துள்ளது. முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணை திறப்பால் நாசமடைந்த நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து குடும்பத்துக்கும் 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்

இனியாவது உடனடியாக அதிகாரிகளைக் கொண்டு இழப்பீடு குறித்து கணக்கு எடுத்து உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

இதற்கு தி.மு.க.வினர், ‘’வெள்ளை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு முதலில் 5700 கன‌அடி நீர் வெளியேற்ற்ப்பட்டு படிப்படியாக தான் அதிகரிக்கப்பட்டது. பொய் சொல்லி மக்களை திசை திருப்ப வேண்டாம்’’ என்று கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

நீங்கள் அடித்துக்கொள்வது பிறகு பார்க்கலாம். முதலில் மக்களை கவனிங்கப்பா.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link