வடதமிழக  கடலோரப்பகுதிகளை  ஒட்டிய  தென்மேற்கு  வங்கக்கடல் பகுதிகளின்  மேல்  ஒரு  வளிமண்டல  கீழடுக்கு  சுழற்சி  நிலவுகிறது. கேரள  கடலோரப்பகுதிகளை  ஒட்டிய தென்கிழக்கு  அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில  இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது .


இதை தொடர்ந்து தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தகவல்  தெரிவிக்கப்பட்டது .

 

அதை தொடர்ந்து சென்னை , திருவள்ளுர் , காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் , நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களின்  லேசானது  முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு  என  தெரிவிக்கப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link