News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையில் பொருந்தாக்கூட்டணி, எந்த நேரத்திலும் இந்த கூட்டணி உடைந்துவிடும், தேர்தல் நேரத்தில் எடப்பாடி தனியே வந்துவிடுவார் என்றெல்லாம் பேசப்பட்டன இதற்கு விடை கொடுப்பது போல் இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்படத் தொடங்கிவிட்டன.

இதற்கு பிள்ளையார் சுழியாக மதுரை முருகர் மாநாடு அமைந்தது. இந்து முன்னணி நடத்திய விழாவில் அதிமுக மாஜிக்கள் கலந்துகொண்டார்கள். அந்த விழாவில் திராவிடத்துக்கு அவமானம் என்றெல்லாம் அந்த நெருக்கடியை திறமையாக சமாளித்தார்கள். இதையடுத்து இன்று சிவகங்கையில் அதிமுகவினர் அஜித்குமாருக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

இந்த போராட்டத்தில் பாஜகவும் கலந்துகொண்டு கூட்டணி தர்மத்தை நிலைநாட்டியுள்ளது. இதற்கு வலு சேர்ப்பது போன்று மத்திய அரசுக்கு இன்று எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ‘’பரமக்குடி–இராமநாதபுரம் இடையிலான என்.ஹெச்.81 நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. 1,853 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் இந்த வழித்தட மேம்பாட்டு திட்டமானது, பயண நேரத்தை குறைத்து, பயணப் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், தென் தமிழகத்தில், குறிப்பாக ராமேஸ்வரம் புனித யாத்திரைப் பகுதியில் சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை பெரிதும் ஊக்கப்படுத்தும். தமிழ்நாட்டின் சாலை இணைப்புத் திட்டங்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்..’’ என்று கூறியிருக்கிறார்.

எந்த நேரத்திலும் கூட்டணி உடைந்துவிடும் என்று நினைத்தவர்களுக்கு இந்த பலமான கூட்டணி பதிலடி கொடுத்திருக்கிறது. இந்த விவகாரம் இரண்டு பக்கத் தொண்டர்களையும் குஷிப்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link