இஸ்ரேல் மீது கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. அதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது.அதை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் . நுற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.

 

இந்த தாக்குதலில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது.

 

இதை தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத்  ஷுகர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

 

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி தாக்குதல் நடத்தி கொன்றது. இதன்பின்பு, ஹிஸ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி மற்றும் அவர்களுடைய செயற்குழுவின் உறுப்பினரான நபில் குவாவக் என்பவரை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்தது.

 

இதை தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் இருந்து இஸ்ரேல்  மற்றும் ஹிஸ்புல்லா இடையே நடந்து வரும் மோதலில் பலர் உயிரிழந்து உள்ளனர். இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் லெபனானில் 3,800க்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் . 16 ஆயிரத்திற்கு மேற்பட்டோர்  காயமடைந்தனர்.  இதனை லெபனானின் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.

 

இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை அமெரிக்க அதிபர் பைடன் வெளியிட்டார். லெபனானில் நடந்து வரும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையும் ஒப்பு கொண்டுள்ளது .

 

இந்த சூழலில், இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டு உள்ள செய்தியில், ஹிஸ்புல்லா வான் படையின் தலைவர் மற்றும் துணை தளபதியான ஜாபர் அலி சமஹா பெய்ரூட் நகரில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார் என தெரிவித்தது .

 

இந்த தாக்குதலில் 70 சதவீதம் வரை பயங்கரவாத அமைப்புகளின் ஆயுத கிடங்குகள் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளன என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ள நிலையில், இந்த தகவலை இஸ்ரேல் வெளியிட்டு உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link