News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ. தனக்கு எதிராக தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமரி மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி கர்நாடக துணை முதல்வரான டி.கே.சிவக்குமார் மீது சொத்துக்குவிப்பு வழக்கை சி.பிஐ. பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் டி.கே.சிவக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ. பதிவு செய்த சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும் டி.கே.சிவக்குமார் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையையும் கர்நாடக உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது.

இந்த வழக்கில் சி.பி.ஐ. இன்னும் 3 மாதத்திற்குள் விசாரணையை நிறைவு செய்ய வேண்டும் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link