இந்திய நாட்டை பகிரங்கமாக மிரட்டிய பாகிஸ்தான் அமைச்சர்!

விஜே பிரியங்கா டிஜே வசியோட கல்யாணம் லேட்டஸ்டாதான் ரொம்ப கிராண்டா நடந்து முடிஞ்சுது. 10 வயசு வித்தியாசமா இருந்தாலும் மிகப்பெரும்புள்ளியதான் கல்யாணம் பண்ணியிருக்காங்கன்னு சிலரும், பாடிஷேமிங் பண்ணி சிலரும் கமெண்ட்டுகள தெறிக்கவிட்டாங்க. ஆனா போங்கடா டேய்னு அதையெல்லாம் ஊதிதள்ளிட்டு மனைவி பிரியங்காவ லண்டனுக்கு அழைச்சிட்டு போயிட்டாரு காதல் கணவர் வசி. லண்டன்லதான் இனிமே கணவரோட பிரியங்கா இருக்கப் போறாங்க. சோ விஜே ஒர்க்குக்கு எண்டு கார்டு போட்டுட்டாங்கன்னு டாக் போகுது. ஒரு பக்கம் டிஜேவா இருக்கிற வசி […]
நிலநடுக்கத்தில் நடிகை செய்த துணிச்சலான செயல்! ரசிகர்கள் அதிர்ச்சி!

இன்று (ஜனவரி 7) காலை நேபாள எல்லையையொட்டி ஏற்பட்ட நிலநடுக்கத்தை பொருட்படுத்தாது நடிகை மணிஷா கொய்ராலா செய்த துணிச்சலான விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில் நேபாள எல்லையொட்டி இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்நிலநடுக்கம் 7.1 ஆக பதிவானது. இந்நிலக்கத்தை தொடர்ந்து 6 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளைவிட்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். முக்கியமான பொருட்களை கையில் […]
ஏமனின் மரண தண்டனை விதிக்கப்பட்ட நர்ஸ்! தீவிர நடவடிக்கையில் மத்திய அரசு!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த நர்சிங் முடித்த நிமிஷா பிரியாவுக்கு திருமணமாகி 8 வயதில் குழந்தை உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு சென்ற நிமிஷா அங்குள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினார். அப்போது தனியாக மருந்தகம் வைக்க வேண்டும் என்று நிமிஷாவுக்கு எண்ணம் எழுந்த நிலையில், அதனை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைத்த மஹிதி என்பவர் நிமிஷாவின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டுள்ளார். மேலும் அவரை பல ஆண்டுகளாக கொடுமைப்பபடுத்தியுள்ளார். இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது […]
புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா! இலவசமாக வழங்க முடிவு!

உலகளவில் மக்களை ஆட்டிப்படைத்து வரும் நோய்களில் முதன்மையாக விளங்குகிறது புற்றுநோய். உடலில் இருக்கும் ஒவ்வொரு பாகத்திற்கும் என்று தனித்தனி புற்றுநோய் ஏற்பட்டு, மக்களை ஆட்டிப்படைத்து உயிர்க்கொல்லியாக இருந்து வருகிறது. ஆரம்ப கட்டத்தில் புற்றுநோய் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் நோயாளிகள் உயிர் பிழைப்பதும், முற்றிய நிலையில் கண்டுபிடிக்கும் பட்சத்தில் சிகிச்சை பலனின்றி மக்கள் உயிரிழப்பதும் வாடிக்கையாகிவிட்டது. மேலும் அன்றாட வாழ்க்கையில் மக்கள் கடைபிடித்து வரும் உணவுப்பழக்க வழக்கங்களும் புற்றுநோய்க்கான காரணியாய் அமைந்துவிடுவது துரதிருஷ்டத்தின் உச்சம். இதற்கான தடுப்பூசி இன்னும் […]
மொசாம்பிக் நாட்டையே புரட்டிப் போட்ட சூறாவளி அதிர்ச்சி தகவல்.

மொசாம்பிக் நாட்டின் பல பகுதிகளை சிடோ என பெயரிடப்பட்ட சூறாவளி கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட 3 மாகாணங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சூறாவளியால் மணிக்கு 160 மைல்கள் வேகத்தில் பலத்த காற்று வீசியது . இதுவரை சூறாவளி பாதிப்புக்கு 34 பேர் பலியாகி உள்ளனர் . 319 பேர் காயமடைந்து உள்ளனர் சூறாவளியால், 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அந்தநாட்டின் தேசிய பேரிடர் ஆபத்து […]
கனடா நாட்டின் துணை பிரதமர் ராஜினாமா அதிர்ச்சி பின்னணி !

அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்ப், சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி ஆகும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார் . கனடாவில் இருந்து சுமார் 75 சதவீத ஏற்றுமதி வர்த்தகம் அமெரிக்காவுடன் மட்டுமே நடைபெறும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு கனடாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து கனடா நாட்டின் துணை பிரதமர் கிறிஸ்டியா பிரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்வதாக […]
தீவை சூறையாடிய புயல்! 1000 பேர் பலி

சிடோ புயல் தாக்கியதில் மயோட் தீவில் 1,000 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பெருங்கடலில் மடகாஸ்ர் நாட்டின் அருகே பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மயோட் தீவு அமைந்துள்ளது. 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் மக்கள் தொகை இத்தீவில் நேற்று (டிசம்பர் 15) அதிகபயங்கர புயல் தாக்கியது. சிடோ என்று பெயரிடப்பட்ட 124 மைல் வேகத்தில் வீசிய புயல் தாக்கியதில் ஏராளமான வீடுகள் தரைமட்டமானது. மேலும் மின்கம்பங்கள் சாய்ந்து, சாலைகள், […]
மனிதர்களை குளிப்பாட்டும் AI மிஷின் புதிய கண்டுபிடிப்பு !

ஜப்பானிலிருந்து எப்போதும் வித்தியாசமான கண்டுபிடிப்புகள் வருவது வழக்கம். ஏ.ஐ தொழில்நுட்பத்தையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. ஏ.ஐ உதவியுடன் செயல்படும் மனிதர்களுக்கான வாஷிங் மிஷினை கண்டுபிடித்துள்ளனர். எளிமையாக சொல்லவேண்டுமென்றால் நம்மை குளிப்பாட்டிவிடும் கருவி. காலையில் எழுந்து குளிக்க இந்த கருவியில் அமர்ந்தால் போதும் 15 நிமிடங்களில் குளிக்கவைத்து சுத்தப்படுத்திவிடும் . ஸ்பாவில் இருப்பது போன்ற அனுபவத்தைக்கொடுப்பதோடு, அதன் நவீன நீர் பாய்ச்சும் திறன், நுண்ணிய காற்று குமிழ்கள் கொண்டு பளபளவென சுத்தப்படுத்திவிடும். இதை தொடர்ந்து AI […]
மசாஜ் செய்தபோது உடலில் விஷம் ஏறியதா ?

தாய்லாந்துக்கு சுற்றுலா செல்வோர் அங்கு மசாஜ் தெரபியை எடுக்காமல் வரமாட்டார்கள். அந்த மசாஜ் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக தற்போது இந்தியாவிலும் மெட்ரோ பாலிட்டன் சிட்டிகளில் மசாஜ் தெரபி செய்யப்படுகிறது. இதனால் அக்டோபர் 5ஆம் தேதி உதான் தானி என்ற பகுதியில் உள்ள ஒரு மசாஜ் பார்லரில் மசாஜ் செய்து வலியை குறைத்துக் கொள்ள சென்றார். அப்போது கழுதது தோள் பட்டையில் வலி குறைந்ததாக சொல்லப்படுகிறது இந்த நிலையில் இரு நாட்கள் கழித்து சாயதாவுக்கு […]
சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் மீட்பு !

சிரியாவில் 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது . அதிபர் பஷார் அல் அசாத் தலைமையிலான அரசுப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான சண்டையில், சில முக்கிய நகரங்கள் கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றன. கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் மோதல் ஏற்படாத நிலையில் , கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது . அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து முன்னேறி தலைநகர் டமாஸ்கசையும் கைப்பற்றினர். இதை தொடர்ந்து 50 ஆண்டு கால […]

