நடிகர் விஜய்க்கு டென்ஷன் தந்த அறிக்கைக்குக் காரணம் இந்த கட்சிக்காரங்களா..?

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று நடிகர் விஜய் ஏற்கெனவே தெளிவாக அறிக்கை கொடுத்திருக்கும் நிலையில் திடீரென, ‘திராவிட கட்சிகளுக்கு ஓட்டுப் போட வேண்டாம்’ நடிகர் விஜய் கட்சியின் பெயரில் திடீரென ஒரு அறிக்கை இணையத்தில் வைரலாக வலம் வந்தது. இதனை உண்மை என்று நம்பி நிறைய விஜய் ரசிகர்கள் இதை சுற்றுக்கு விடத் தொடங்கினார்கள். அதேநேரம், ஒருசிலர் மட்டும் சந்தேகத்துடன் தலைமையைத் தொடர்புகொண்டார்கள். இதையடுத்தே ‘தமிழக வெற்றிக் கழகம்’ பெயரில் போலியாக […]
மோடி வர்றார்… அமித் ஷா ஓடுறார்… தேர்தல் பயணம் ரத்துக்கு காரணம் இதுதானா..?

எத்தனை தீவிரமாக சுற்றுப்பயணம் செய்தாலும் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு சீட் கிடைக்கப்போவதில்லை எனவே, உத்தரப்பிரதேசம் போன்ற பகுதியில் கவனம் செலுத்தினால் நல்லது என்று உளவுத் துறை ரிப்போர்ட் கொடுத்ததாகவும், இதையடுத்தே அமித் ஷா சுற்றுப்பயணம் ரத்து செய்ததாகவும் சொல்லப்படுகிறது. பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரதமர் மோடி தமிழகத்தில் ஏற்கனவே பிரசாரம் செய்துள்ள நிலையில் அடுத்த வாரமும் பிரசாரம் செய்ய வர இருக்கிறார். சென்னையில் ரோடு ஷோ நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் கன்னியாகுமரி, […]
தமிழகத்திற்கு தண்ணீர் தரமாட்டோம்- கர்நாடகா திட்டவட்டம்

தமிழகத்திற்கு கண்டிப்பாக காவேரி நீரை தரமாட்டோம் என்று கர்நாடகா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் கலந்து கொண்டனர். மேலும் கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்று வருகின்றனர். இக்கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையாவது: […]
பிரேமலதாவை மிரட்டுனாங்களாம்… பா.ஜ.க. மீது பகீர் குற்றச்சாட்டு

2024 தேர்தலில் பிரேமலதா யாருடன் கூட்டு வைப்பார் என்பது பெரிய சஸ்பென்ஸ் ஆக இருந்தது. பா.ஜ.க.வின் மோடியில் இருந்து அண்ணாமலை வரையிலும் விஜயகாந்தை பாராட்டி பேசிக்கொண்டு இருந்ததால் அங்குதான் கூட்டணி சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க. கூட்டணியில் ராமதாஸ் இணைந்ததால், அ.தி.மு.க.வுக்கு வந்துவிட்டார் பிரேமலதா. இதையடுத்து அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரேமலதா. அந்தவகையில் ஶ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரேம்குமாரை ஆதரித்து பேசியபோது, ‘பாஜகவுடன் கூட்டணி […]
ஜெயிக்கப் போகிறாரா அண்ணாமலை..? கோவை கள நிலவரம்

மத்த தொகுதிகளில் எப்படியோ கோவையில் அண்ணாமலை கண்டிப்பாக வெற்றி அடைந்துவிடுவார், உளவுத் துறை கொடுத்த ரிப்போர்ட் அடிப்படையில்தான் அவர் கோவையில் நிற்கிறார் என்று பா.ஜ.க.வினர் பில்டர் கொடுத்துவரும் நிலையில் கோவை தொகுதியில் ரவுண்ட் அடித்தோம். கோவையில் தி.மு.க. சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க.வின் ஐ.டி. விங் சிங்கை ராமச்சந்திரன், பா.ஜ.க.வின் அண்ணாமலை ஆகியோர் நிற்கிறார்கள். தமிழகத்திலேயே அதிக பணம் உள்ள வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன். இப்போது இவருக்கு வேலுமணி வாக்கு கேட்டு வந்தாலும், கடந்த […]
யாரிடம் கேட்கிறாய் கணக்கு..? நிர்மலா சீதாராமனை பொளந்து கட்டிய ஸ்டாலின்

பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீது கடுமையாக தாக்குதல் நடத்திவரும் முதல்வர் ஸ்டாலின் நிர்மலா சீதாராமனை கடுமையாக எச்சரிக்கை செய்திருக்கிறார். திருவண்ணாமலையில் போட்டியிடும் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்துப் பேசிய ஸ்டாலின், “10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? என தொடர்ந்து மக்களின் குரலாக கேட்டு வருகிறேன். ஆனால், எந்த பதிலும் இல்லை.. தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. அதுகுறித்து நக்கலாக பதில் சொல்கிறார் நிர்மலா சீதாராமன். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை […]
ஏப்ரல் 12ம் தேதி ராகுல்காந்தி தமிழகம் வருகை!

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரசாரம் செய்வதற்காக ஏப்ரல் 12ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 வார காலமே உள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதான கட்சிகள் முழு வேகத்துடன், வேட்பாளர்களை முன்னிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. மேலும் நட்சத்திர பேச்சாளர்களையும் நியமித்து மக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மேலும் வேட்பாளர்கள் டீக்கடையில் டீ போட்டு தருவது, டிபன் கடையில் […]
கமல்ஹாசனின் ஓசி பிரசாரம்… மக்கள் நீதி மய்யத்தினர் என்ன சொல்றாங்க..?

ஒரே ஒரு சீட் கூட வாங்காமல் இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு இலவசமாக பிரசாரம் செய்துவருகிறார் கமல்ஹாசன். நீண்ட நாட்களுக்குப் பிறகு தேர்தல் களத்திற்கு வந்திருக்கும் கமல் பேச்சு எப்படி என்று மக்கள் நீதி மய்யத்தினரிடம் பேசினோம். ‘’ஈரோடு, திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளில் கமல் பேசியது மிகவும் சிறப்பாக இருக்கிறது.. குறிப்பா மோடியை வெளித்து வாங்குகிறார். திருச்சியில் பேசியபோது, ’இந்திய தேசத்தின் பன்முகத்தன்மையைக் காக்கும் நேரம் இது. இந்த ஊரில் இருந்து இதைக் கூறுவது பெருமைக்குரியது. ஏனெனில், […]
அண்ணாமலைக்கு டோஸ் விடும் சீமான்… இரண்டு கட்சிகளும் தேர்தலில் தேறுமா..?

ஆளும் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தேர்தல் களத்தில் மோதிக்கொண்டிருக்கும் நேரத்தில் அண்ணாமலைக்கும் சீமானுக்கும் இடையில் காரசார மோதல் நடந்துகொண்டு இருக்கிறது. இதையடுத்து தமிழக தேர்தல் களம் நான்கு முனை போட்டி என்பதிலிருந்து நழுவி இரண்டு முனைப் போட்டியை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. சமீபத்தில் அண்ணாமலைக்கு எதிராகப் பொங்கினார் சீமான், ‘ அண்ணாமலை.. ஏதோ தமிழ்நாட்டுல ஆடிட்டு இருக்க. அதிகாரத் திமிருல ஆடுற. நீ உண்மையிலேயே வீரனாக இருந்தால், என் கருத்துக்கு எதிர் கருத்து கூறி மோதிப் பாரு. தைரியம் […]
மருத்துவமனையில் துரை தயாநிதி! நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த டிசம்பர் மாதம் 6ம் தேதி சென்னை போயஸ் கார்டனில் வசித்து வந்த துரை தயாநிதிக் திடீரென்று மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர் கீரம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில் துரை தயாநிதியின் மூளையில் சுமார் 6 மணிநேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. […]

