களை எடுக்கப்பட்ட கோவை, நெல்லை மேயர்கள் பின்னணி. அடுத்த டார்கெட் மதுரை..?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நெல்லை, கோவை தி.மு.க. மேயர்களிடம் ராஜினாமா கடிதம் வாங்கி அதிரடி காட்டியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். உட்கட்சி பூசல் கொடி கட்டிப் பறக்கும் மதுரை மேயரிடமும் விரைவில் ராஜினாமா கடிதம் வாங்கப்பட இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. கோவை தி.மு.க.வுக்கு பொறுப்பாக செந்தில்பாலாஜி இருந்த காலத்தில், அவரது பரிந்துரையின் பேரில் மேயர் ஆனவர் கோவை மாநகராட்சி 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார். இவரிடம் ராஜினாமா வாங்கியதற்கு முக்கியக் காரணம், நாடாளுமன்றத் தேர்தலில் இவரது ஏரியாவில் […]
விக்கரவாண்டியில் வேட்டி, சேலை விநியோகம்! கொந்தளித்த அன்புமணி!

விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட விக்கிரவாண்டி தொகுதியில் இம்மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி திடீரென்று உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் அறிவிப்பின்படி வருகிற 10ம் தேதி விக்கிரவாண்டியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணி வேட்பாளராக தேர்தலை சந்திக்கிறார். அ.தி.மு.க. தேர்தலை […]
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த விஜய்! பாராட்டிய கட்சி பிரமுகர்கள்!

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், இன்று (ஜூலை 3ம்தேதி) நடைபெற்ற விஜய் விருதுகள் வழங்கும் விழா 2.0வில் கலந்து கொண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கிய மாணவ, மாணவிகளுக்கு தொகுதி வாரியாக சால்வை அணிவித்து, சான்றிதழ் வழங்கி பாராட்டினார். கடந்த ஜூன் 28ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய விஜய், போதைப் பொருட்கள் வேண்டாமென்று மாணவ, மாணவிகளை உறுதிமொழி எடுக்க வைத்தார். அதே போன்று தமிழகத்திற்கு […]
தங்க கடத்தலில் அண்ணாமலைக்குத் தொடர்பு..? லண்டன் பயணத்துக்குச் சிக்கல்

நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தோல்வியை சந்தித்த அண்ணாமலையை தமிழகத்தில் இருந்து அனுப்புவதற்கு திட்டமிட்டு லண்டன் படிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அண்ணாமலையின் நெருங்கிய கூட்டாளி தங்கக் கடத்தலில் சிக்கியிருப்பதை அடுத்து அண்ணாமலைக்கும் சிக்கல் வரும் என்றும் அவர் வெளிநாடு செல்வதற்கு தடை போடப்படும் என்றும் சொல்லப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாக தங்கம் கடத்தும் செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும், சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில், பரிசுப் பொருட்கள், பொம்மை […]
அன்புமணியை கதறவிடும் எடப்பாடி பழனிசாமி. குஷியில் சீமான்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்றாலும், அந்த கட்சிக்கு 36% வாக்கு வங்கி இருக்கிறது. இந்த வாக்கு யாருக்குச் செல்லும் என்பது தான் இப்போது கேள்வியாக மாறி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் சீக்ரெட் மூவ் அன்புமணிக்கு ஆப்பு வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கும் பிரச்சார நிகழ்ச்சியில் அதிமுகவினர் கட்சிக் கரை கட்டிக்கொண்டு வாக்கு சேகரிக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகின. அதோடு, அன்புமணியும் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்களை போட்டு மாம்பழத்துக்கு வாக்கு […]
போலே பாபாவின் காலடி மண்ணுக்கு 120 உயிர்கள் பலி. ஹத்ராஸ் பரிதாபம்.

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிகச் சொற்பொழிவாளரின் காலடி மண்ணை எடுக்க வேண்டும் என்று முண்டியடித்த கூட்டம் ஒருவர் மீது ஒருவர் விழுந்து 120க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்திருக்கிறார்கள். கல்வி, பொருளாதாரம், பகுத்தறிவில் மேம்படாத தேசம் இப்படித்தான் இறந்துகொண்டிருக்கும் என்று வைரமுத்து கண்டனம் தெரிவித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் சிக்கிய 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமுற்றிருக்கிறார்கள். சாவு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறந்தவர்களில் குழந்தைகளும் பெண்களும்தான் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்திருக்கிறார்கள். இது கோயில் திருவிழா அல்லது கும்பமேளா அல்ல. ஒரு சாமியார் […]
ஒன்றிய அரசு, நீட் எதிர்ப்பு. விஜய் டெரர் அரசியல்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக பரிசு வழங்கி பாராட்டும் விழா இன்று நடத்தப்பட்டது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், ‘’இன்று நான் நீட் தேர்வு பற்றி பேசவேண்டி இருக்கிறது. ஒன்றிய அரசு கொண்டுவந்த இந்த தேர்வு நியாயமானதாக இல்லை’’ என்று முதன்முதலாக மத்திய அரசு மீது வெளிப்படையாக குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். குறிப்பாக ஒன்றிய அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது மிகப்பெரிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. அதோடு, […]
டெல்லியில் காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் குடியரசுத்தலைவர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திப்பதற்காக நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அதற்கேற்றவாறு கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நடைபெற்ற கள்ளச்சாராய மரணங்கள் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. முதல் காவல்நிலையத்தில் பணியாற்றிய […]
அண்ணாமலை அரசியல் அம்புட்டுத்தானா..? லண்டனுக்கு பேக்கப்.

அரசியல் படிப்பதற்காக அண்ணாமலை லண்டனுக்குச் செல்வதாக கூறப்படும் விவகாரம், அவரை தமிழக அரசியலில் இருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்தும் விஷயம் என்று சீனியர்கள் குஷியில் இருக்கிறார்கள். ஆனாலும், ‘அண்ணாமலை லண்டன் கோர்ஸ் முடிச்சதும் தமிழகம் திரும்பி புதிய ஸ்கெட்ச் போட்டு தமிழக முதல்வரா ஆயிடுவார்’’ என்று அவரது வார் ரூம் தினமும் புதுப்புது தகவல்களை வெளியிட்டு அவரது ஆதரவாளர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக இந்தியாவில் இருந்து 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், […]
தேர்தல் வந்துட்டா அன்புமணியை கையில் பிடிக்க முடியாது. இடஒதுக்கீடு போராட்டம்.

பொதுத் தேர்தல், இடைத் தேர்தல் என ஏதாவது வந்துவிட்டால் உடனே டாக்டர் ராமதாஸ்க்கும் அன்புமணி ராமதாஸ்க்கும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கை ஞாபகத்துக்கு வந்துவிடும். அந்த வகையில் இப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு அன்புமணி வன்னியர் ஓட்டுகளை வளைப்பதுடன் அ.தி.மு.க. வாக்குகளுக்கும் அடி போடுகிறார். இத்தனை நாட்களும் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் இழந்தவர்களை கண்டுகொள்ளாத அன்புமணி இடைத்தேர்தலை முன்னிட்டு விக்கிரவாண்டி தொகுதிக்குள் அடங்கியிருக்கும் பாப்பனப்பட்டி நினைவுத் தூணில் மலர் அஞ்சலி செலுத்தினார். சாணிமேடு கிராமத்தில் பிரசாரம் செய்த […]

