News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

’’ஒருத்தர் தப்பா பாடலாம், நாலு பேருமா அப்படி பாடுவாங்க…’’ ஸ்டேஷனுக்குக் கூப்பிட்டு மாவுக்கட்டு போடுங்க

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடம் என்பது கவர்னரின் உத்தரவுப்படி திட்டமிட்டுத் திருத்தப்பட்டது என்பது தான் தி.மு.க.வின் குற்றச்சாட்டு. ஆனால், இதன கவனக்குறைவு என்கிறது டிடி தமிழ். இதையடுத்து, கவனக்குறைவு என்றால் யாராவது ஒருவர்தானே திராவிடம் என்பதை தவறவிட முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பேசும் தி.மு.க.வினர், ‘’கவர்னர் திட்டமிட்டு திராவிடத்தை தவிர்க்கச் சொல்லியிருக்கிறார் என்பது அந்த பாடல் பாடப்படும் நேரத்தில் அவரது உடல்மொழி மூலம் அறிய முடிகிறது. டிடி தமிழ் சொல்வது போன்று கவனக்குறைவு […]

தமிழகத்தில் 304 ஏழை ஜோடிகளுக்கு திருமணம்! எங்கு எப்போது தெரியுமா?

வருகிற 21ம் தேதி (திங்கட்கிழமை) 304 ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற உள்ளது.   இந்து சமய அறநிலையத்துறையின் 2024& 2025ம் நிதி ஆண்டிற்கான சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியானது. அதாவது பொருளாதாரத்தில் பின் தங்கிய 700 ஜோடிகளுக்கு கோவில்கள் சார்பாக 4 கிராம் தங்கத்தாலி உட்பட 60 ஆயிரம் ரூபாய் சீர்வரிசை வழங்கி திருமணம் செய்துவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.   இந்த அறிவிப்பின்படி வருகிற திங்கட்கிழமை […]

சீமான் இப்படி பேசலாமா..? வில்லங்கமாகும் ராவண வதம்

கடந்த வாரம் நடைபெற்ற தசரா இறுதி நாளில் டெல்லியில் ராவண வதம் நிகழ்ச்சி நடந்தது. அதில் குடியர்சுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ராவண உருவத்தை அம்பு எய்தி தீ வைத்துக் கொளுத்தினார்கள். அதனை கொஞ்சமும் கண்டுகொள்ளாத நாம் தமிழர் சீமான் ஆஸ்திரேலிய ராவண வதத்திற்கு ரொம்பவே பொங்கியிருக்கிறார். இன்று சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் நகரங்களில் வருகின்ற அக்டோபர் 27 அன்று இராவண வதம் என்ற […]

பா.ஜ.க.வுக்குத் தாவுகிறார் பொன்முடி? பதவி பறிப்பு அதிருப்தி

துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்ற நேரத்தில் பொன்முடியிடம் இருந்த பவர்ஃபுல் பதவியான உயர் கல்வித் துறை புடுங்கப்பட்டு, டம்மியாக வனத்துறை வழங்கப்பட்டது. துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு ஆகிய சீனியர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் தன்னுடைய பதவியை மட்டும் பறித்த ஸ்டாலின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் பொன்முடி. இதையடுத்தே விழுப்புரத்தில் நடைபெற்ற பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பொன்முடி, ‘’தி.மு.க.வில் யார் வேட்பாளர் என்பதை தலைவர் முடிவு செய்வார், உதயா முடிவு செய்வார். […]

இது தான் பா.ஜ.க. பிளான்..? பன்னீர், தினகரனை ஓட விடும் எடப்பாடி பழனிசாமி..!

அண்ணா தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்துவதற்கு எந்த தியாகத்துக்கும் தயார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதை அடுத்து, ‘தங்களுக்கான வாசல் திறந்துவிட்டது’ என்று பன்னீர் டீம் குதூகலம் அடைந்தனர். ஆனால், பன்னீர், தினகரன் ஒருபோதும் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் தெளிவு படுத்திவிட்டார். இதையடுத்து பா.ஜ.க. டீம் பதட்டத்துக்குப் போயிருக்கிறது. சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து ஒரு டீம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது. அவர்களுடைய திட்டப்படி சசிகலாவுக்கு எந்த அதிகாரமும் இல்லாத பொதுச் செயலாளர் பதவியும் பன்னீருக்கு […]

அடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா இவர் தானுங்க….

தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் சந்திரசூட் வரும் நவம்பர் 10-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், நடைமுறையின்படி, அவருக்குப் பின் அவருடைய பதவிக்கு வருபவர் பெயரைக் குறிப்பிடுமாறு அரசாங்கம் அவருக்கு கடந்த வாரம் கடிதம் எழுதியிருந்தது. அதன் படி உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான சஞ்சீவ் கண்ணாவை தனக்குப் பின் தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு இந்திய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். யார் இந்த சஞ்சீவ் கண்ணா? நீதிபதி […]

ஜக்கியின் ஈஷா மையத்தின் மீது இத்தனை வழக்குகளா..? புடுச்சி உள்ளே போடுங்க

கோவை ஈஷா மையத்துக்கு ஒரு பிரச்னை என்றால் உச்ச நீதிமன்றமே ஓடோடி வந்து அவசர வழக்காக விசாரிக்கும். அந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ள ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று தமிழ்நாடு காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தனை வழக்குகள் இருந்தும் உத்தமர் போன்று ஈஷா காட்சியளிப்பது தான் மேலிடத்து ஆசிர்வாதம். ஈஷா மைத்திலிருந்து காணாமல் போனவர்கள் தொடர்பாக 6 வழக்குகள் பதியப்பட்டுள்ளது, அதில் 5 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. […]

சாம்சங் போராட்டம் தோல்விகரமான வெற்றி..? பருத்தி மூட்டை குடோனிலே இருந்திருக்கலாம்

கடந்த 38 நாட்களாக நடந்துவந்த சாம்சங் தொழிலாளர் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, இன்று முதல் வேலைக்குத் திரும்புகிறார்கள். ஒன்பது முறைகளுக்கு மேல் நீடித்த பேச்சுவார்த்தைகள், நள்ளிரவுக் கைதுகள், தொடர் வழக்குகள், கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம், அமைச்சர்களின் தலையீடு ஆகியவற்றைக் கடந்து வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. சங்கத்திற்கு இன்னமும் சாம்சங் அனுமதி கொடுக்கப்படாத நிலையில் போராட்டம் முடிவுக்கு வந்திருப்பது உண்மையான வெற்றியா என்ற கேள்வி எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் சுமார் […]

4 ஆயிரம் கோடிக்கு கணக்கு காட்டாமல் உதயநிதி எஸ்கேப்..? வெள்ளை அறிக்கை வில்லங்கம்

ஒரே ஒரு நாள் 6 செ.மீ. மழைக்கே தண்ணீர் வெள்ளமாக நிற்கிறது என்பதால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெள்ளை அறிக்கை கேட்டார். அதற்கு துணை முதல்வர் உதயநிதி, ‘’மழை நீர் எங்கேயும் தேங்கவில்லை என்பதே வெள்ளை அறிக்கை’ என்று கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் கணக்கு காட்டாமல் உதயநிதி எஸ்கேப் ஆகிறார் என்ற வில்லங்கம் எழுந்துள்ளது. இது குறித்துப் பேசும் அ.தி.மு.க.வினர், ‘’மழை நீர் தேங்காத வகையில் 4000 கோடிக்கு திட்டங்களை வகுத்த அரசு, அதை முறையாக […]

விஜய் மாநாட்டில் தந்தை சந்திரசேகருக்கு மறுப்பு. சங்கீதா இல்லைன்னா கீர்த்தி சுரேஷ் ஆஜர்

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு தந்தை சந்திரசேகருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதுடன், எந்தக் காரணம் காட்டியும் அங்கே வந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கை கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்பதற்காக மாநாடு நடைபெற இருக்கும் விக்கிரவாண்டியில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தீவிரம் காட்டி வருகிறார். மழை வந்தாலும் பாதிக்கப்படாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய […]