அதானியை ஏன் காப்பாற்றுகிறார் மோடி..? இதுக்குத்தான் ஒரே நாடு ஒரே தேர்தலா..?

நாடாளுமன்றத்தை முடக்கும் அளவுக்கு எதிர்க்கட்சிகள் இத்தனை எதிர்ப்பு காட்டிய பிறகும் அதானி மீது விசாரணை நடத்துவதற்கு மத்திய அரசு முன்வராதது சாதாரண பொதுமக்களிடமும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தைக் கையில் எடுத்து அதானி விவகாரத்தில் இருந்து எதிர்க்கட்சிகளை திசை திருப்புகிறார் மோடி. இது குறித்துப்பேசும் அரசியல் ஆர்வலர்கள், ‘’இன்று இந்தியாவையே அதானிக்கு விற்கும் வேலையை தான் மோடி அரசு செய்து வருகிறது. நிலக்கரி இறக்குமதி, ஊழல் சோலார் ஊழல், […]
குகேஷை சொந்தம் கொண்டாடும் தெலுங்கு அரசியல்… சாதி கொண்டாட்டம் சரியா..?

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் பெற்றதுடன் மிகவும் இளவயதில் உலக செஸ் சாம்பியன் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். தமிழக அரசின் நிதியுதவியுடன் விளையாடி வெற்றி பெற்றிருக்கும் குகேஷை தெலுங்கு பையனுக்கு வாழ்த்துக்கள் என்று சந்திரபாபு நாயுடு இனம் பிரித்துக் காட்டியிருப்பது சர்ச்சையை எழுப்பியிருக்கிறது. ஒருவர் வெற்றி பெறாத வரையிலும் யாரும் கண்டுகொள்ளவே மாட்டார்கள். அவர் வெற்றி பெற்று, […]
விஜய் ஃப்ளைட்டில் த்ரிஷா..? வைரலாகும் பிரைவேட் டிரிப்

எனக்கு சம்பிரதாயத்தில் எந்த நம்பிக்கையும் இல்லை, டைரக்டா உதவி மட்டும் தான் என்று அரசியல் செய்துவரும் நடிகர் விஜய், ஃபெஞ்சல் புயல் பாதித்த பகுதிகளுக்கு நேரில் செல்லாமல் பனையூருக்கு கூட்டிவந்து நிவாரண உதவி கொடுத்தார். அதேநேரம், தன் நெருங்கிய தோழி கீர்த்தி சுரேஷுக்குக் கல்யாணம் என்றதும் கோவாவுக்கே நேரடியாகப் போய் நின்று ஆசிர்வாதம் வழங்கினார். இந்த விவகாரத்தில் மக்களை கவனிக்காமல் விஜய் நடிகையைக் கவனிக்கச் சென்றார் என்பதைத் தாண்டி தனி ஃப்ளைட்டில் த்ரிஷாவை எதற்குக் கூட்டிச் சென்றார் […]
ரஜினிக்கு விஜய் வாழ்த்து சொன்னது குத்தமாய்யா… இப்படி கெட்ட வார்த்தைகளில் திட்டுறாங்க

யார் சூப்பர்ஸ்டார் என்று தொடங்கிய பஞ்சாயத்தில் ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் கடுமையான மல்லுக்கட்டு நிலவியது. ரஜினியின் வேட்டையன் படத்தை கடுமையாக டிரோல் செய்து விஜய் ரசிகர்கள் அவமானப்படுத்தினார்கள். விஜய் அரசியல் மாநாட்டை ரஜினி ரசிகர்கள் அநியாயத்துக்குக் கிண்டல் செய்தார்கள். புதிய கட்சி அறிவிப்புக்கு ரஜினிகாந்த் வாழ்த்து கூறினார். அதை விஜய் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆகவே, இரண்டு பக்கமும் மோதல் நடந்துகொண்டே இருந்தது. இந்த நிலையில் இன்று ரஜினியின் பிறந்த நாளுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் […]
எடப்பாடி பழனிசாமி பதவிக்கு ஆபத்து..? ஓ.பி.எஸ். அணியின் புதிய மிரட்டல்

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பத்தின் மீது ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள விவகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ஜ.க. வைத்துள்ள பலப்பரீட்சையாகவே பார்க்கப்படுகிறது. திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்ய மூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘அதிமுக தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடியும்வரை இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்ததாகவும், ஆனால், மனு மீது […]
உயிர் தப்பிய 145 விமான பயணிகள்! பரபரப்பு தகவல்கள்!

விமானத்தில் திடீர் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதை கண்டறிந்து விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் 145 பயணிகள் உயிர் தப்பிய சம்பவம் சென்னை மீனம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மீனம் பாக்கத்தில் இன்று (நவம்பர் 11) காலை 11.55 மணியளவில் சிங்கப்பூருக்கு செல்லக் கூடிய ஏர் இந்தியா விமானம் 145 பயணிகளுடன் பயணம் மேற்கொள்ள தயாராக இருந்தது. விமானம் புறப்படுவதற்கு முன்னதாக விமானி இறுதிக்கட்ட பரிசோதனை மேற்கொள்வது வழக்கம். அதன்படி விமானி இறுதிகட்டமாக பரிசோதனை மேற்கொண்டிருந்த […]
பாரதிக்கு ஆளுநர் மரியாதை இதற்குத்தானா? சாதி பாடலை திருத்தப் போறாங்க

சாதிகள் இல்லையடி பாப்பா என்று முழக்கமிட்ட சமூக சீர்திருத்தவாதி புரட்சிக்கவி பாரதியாரின் 143வது பிறந்த நாள் விழா இன்று தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ஆளுநர் மாளிகையில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 143வது பிறந்தநாளில் அவரது தீவிர பற்றாளர்களுடன் சேர்ந்து பாரதியின் ஜதி பல்லக்கு ஊர்வலத்தை கவர்னர் தோளில் சுமந்து தூக்கியும், கொடியசைத்தும் துவக்கி வைத்தார். மகாகவி பாரதியாருக்கு ஜதி பல்லக்கு தூக்கும் ஆளுநர் ரவிக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து பாரதியின் ஒரு பாடலை நினைவூட்டி பதிவு […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி உடைப்பு..? திருமா நிர்வாகிகளை வளைக்கும் ஆதவ் அர்ஜூனா

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் நுழைந்ததும் துணைப் பொதுச்செயலாளர் பதவி ஆதவ் அர்ஜூனாவுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து கட்சி நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என்று ஆதவ் அர்ஜூனா கூறிய திட்டத்தை திருமாவளவன் ஏற்றுக்கொண்டார். தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் மாவட்ட செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்கள், கிளை செயலாளர்கள், ஊடக ஒருங்கிணைப்பாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆகியோர் அடங்கிய நிர்வாக குழுவை நியமிக்கும் வேலை ஆதவ் அர்ஜூனாவுக்கு ஒதுக்கப்பட்டது. ஒரு தொகுதிக்கு […]
சபாஷ், சரியான போட்டி. ரிலீஸ் ஆகும் அண்ணாமலை ஃபைல்ஸ்

ஒரு காலத்தில் அண்ணாமலை ஆர்மியில் ஒரு முக்கியப் புள்ளியாக இருந்தவர் திருச்சி சூர்யா. அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்டு எல்லா கட்சியினருடனும் சண்டைக்குப் போய்க்கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்தார். ஆனால், அண்ணாமலை மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பதாகத் தெரியவில்லை என்றதும், அவருடனே மோதத் தொடங்கிவிட்டார். சமீபத்தில் தி.மு.க. ஃபைல்ஸ் 3 வெளியிடப்படும் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார். ஆதாரம் இருந்தால் உடனடியாக வெளியிடலாமே எதற்காக தேர்தல் வரை வெயிட் செய்ய […]
அண்ணாமலையின் தி.மு.க. ஃபைல்ஸ் 3 ரெடி. அதானிக்கு எஸ்கேப்

vலண்டனில் இருந்து அண்ணாமலை திரும்பிவந்ததும் படுவேகமாக அரசியல் செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அண்ணாமலை என்னவோ அடக்கியே வாசிக்கிறார். அதேநேரம், தேர்தல் நேரத்தில் தி.மு.க. ஃபைல்ஸ் பார்ட் 3 வெளியிடப்படும் என்று அறிவிப்பு செய்திருக்கிறார். இதை தி.மு.க.வினரே கூட கண்டுகொள்ளவில்லை என்பது தான் ஆச்சர்யமான திருப்பம். அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவராக வந்ததுமே தி.மு.க. அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்தும் ஊழல் ஃபைல்ஸ் வெளியிட்டார். முதல் முறை அவர் வெளியிட்ட ஃபைல் பெரும் பரபரப்பானது. அதையொட்டி […]

