News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ராகுல் பிரதமர். கார்கே ஜனாதிபதி. நிதின் கட்கரிக்கும் பிரதமர் வாய்ப்பு?

2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டுள்ள 328 தொகுதிகளில் கண்டிப்பாக 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். எனவே, கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து பதவியேற்கச் செய்வது என்று காங்கிரஸ் வட்டாரத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கார்கேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கூட்டணிக் கட்சியினர் அழுத்தம் கொடுத்தால், கார்கேவுக்கு ஜனாதிபதி பதவி கொடுக்கப்படும் என்ற உறுதி கொடுக்கப்படும் என்கிறார்கள். […]

தேர்தல் ஆணையத்திற்கு தி.மு.க. அவசரக் கடிதம். காரணம் தெரியுமா..?

ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணிக்கையில் குளறுபடி செய்து பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்யும் என்பதே இப்போது இந்தியா முழுக்க பரபரப்பான பேச்சாக இருக்கிறது. இந்த நிலையில் தபால் வாக்குகள் குறித்து தேர்தல் ஆணையருக்கு தி.மு.க. ஒரு முக்கிய வேண்டுகோள் வைத்திருக்கிறது. பொதுவாக தபால் வாக்குகளை எண்ணிவிட்டாலும் முதலில் அறிவிப்பு செய்வதில்லை. கடைசி கட்டத்தில் அதனை ஒட்டுமொத்த ரிசல்ட் அறிவிக்கும் நேரத்தில் தான் மொத்த வாக்குகள் குறித்து தெரிவிக்கிறார்கள். இப்படி அறிவிப்பதன் மூலம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக […]

கன்னியாகுமரியில் மோடி. புதிய தியானம் படம் ரிலீஸ்

தேர்தல் பிரசாரம் ஓய்வடைந்த நிலையில், மோடி மெளனப் பிரசாரம் செய்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், அதை உண்மையென்று நிரூபிப்பது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசித்து, விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி வியாழன இரவு தொடங்கி இரண்டாவது நாளாக அவர் தியானத்தைத் தொடர்ந்து வருகிறார். விவேகானந்தர் பாறையில் காவி உடை அணிந்து அவர் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். தியானப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன. பிரதமர் தியானம் செய்கிறார் என்பதற்காக […]

பள்ளிக்கூடம் திறக்காதீங்க. ஸ்டாலினுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

பிள்ளைகளுக்கு விடுமுறை முடிவுக்கு வரப்போகிறது. விரைவில் ஸ்கூலில் விட்டுத் திரும்பினால் தான் நிம்மதி என்று பெற்றோர் நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில், இப்பொது பள்ளியைத் திறக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ். இது குறித்து ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘தமிழ்நாட்டில்  கோடை விடுமுறை முடிந்து  ஜூன் 6-ஆம் தேதி அரசு பள்ளிகளும், மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டின்  அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் […]

அண்ணாமலை சீடருக்கு நாம் தமிழர் மிரட்டல்.

–    சூடு பிடிக்கும் துரைமுருகன் விவகாரம்   அண்ணாமலையின் சீடராக கருதப்படும் திருச்சி சூர்யா இந்த தேர்தல் காலத்தில் அமைதியாக இருந்தார். சமீபத்தில் சீமானுக்கும் அண்ணாமலைக்கும் இடையில் தேர்தல் மோதல் ஆரம்பித்திருக்கும் நிலையில் அவரும் களத்தில் குதித்துவிட்டார். சாட்டை துரைமுருகன் மனைவி குறித்து ஒரு தகவலை பொதுவெளியில் வைத்தார். உடனே நாம் தமிழர் தம்பிகள் திருச்சி சூர்யா மீது பாய்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் சாட்டை துரைமுருகன் இதுகுறித்து, ‘என்னைப் பற்றியும் அண்ணன் சீமான் அவர்களைப் பற்றியும் […]

பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணா இன்று கைது..?

கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வின் ஆதரவு இருப்பதை வைத்து இத்தனை நாட்களும் போலீஸாருக்கு கண்ணாமூச்சு ஆடிவந்த பிரஜ்வல் ரேவண்ணா, தேர்தல் களேபரம் முடிந்திருக்கும் நிலையில் இன்று கைதாவார் என்று தெரியவருகிறது. இது குறித்து பிரஜ்வல் ரேவண்ணா வெளியிட்டிருக்கும் வீடியோவில், ‘’‘மே 31-ம் தேதிகாலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் முன்னிலையில் நேரில் ஆஜராகிறேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்” என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பிரஜ்வல் ஜெர்மனியின் முனிச் நகரத்தில் இருந்து பெங்களூருக்கு வியாழக்கிழமை நள்ளிரவு 12.05 […]

வாக்கு மையத்தில் தி.மு.க. தில்லுமுல்லு செய்வாங்க. எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

தில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கை தேர்ந்தவர்கள் எனவே, வாக்கு எண்ணும் மையங்களில் மிகுந்த விழிப்போடு கண்காணிக்க வேண்டுமென அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 4.6.2024 அன்று, கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் அறிவுறுத்தலின்படி, […]

கோ பேக் மோடி, பபூன் மோடி – 2024 தேர்தல் கிளைமாக்ஸ்

ஜூன் 1ம் தேதியுடன் 2024 மக்களவைத் தேர்தல் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணமும் காந்தி பேச்சும் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கின்றன. பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள இருப்பதால், இந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாவுத்துறை, கோவளம், சின்னமுட்டம், புதுகிராமம், ஆரோக்கியபுரம் கிராமங்களில் 1,000 படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் 10,000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் […]

வைகோவுக்கு டைட்டானியம் பிளேட் அறுவை சிகிச்சை. 40 நாட்கள் ரெஸ்ட்

நெல்லை திருமண விழாவில் பங்கேற்கச் சென்ற வைகோ கால் தடுமாறி கீழே விழுந்ததில் தோள் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மிகுந்த வேதனையில் விழுந்தார். இதையடுத்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டார். சென்னையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று சொல்லப்பட்ட நிலையில், நேற்று ஒரு வீடியோ வெளியிட்டு தன்னுடைய உடல் நிலை குறித்து வைகோ பேசியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்திருக்கிறது. இதுகுறித்து துரைவைகோ, ‘இன்று தலைவர் வைகோ அவர்களுக்கு […]

நடிகர் விஜய் பிரியாணி விருந்து மெகா சக்சஸ்..?

உலகப் பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுக்க ஏழை மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று அவரது தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் தமிழகம் முழுக்க பிரியாணி விருந்து மெகா சக்சஸ் என்று அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.   தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருக்கிறார். இந்த நிகழ்வில் ரசிகைகள் […]