தளபதி பெயர் கொண்டவருக்கு சீமான் ஹேப்பி பர்த் டே வாழ்த்து

நடிகர் விஜய் இன்று 50வது பிறந்த நாள் கொண்டாடுகிறார். கள்ளக்குறிச்சி மரணங்கள் காரணமாக பிறந்த நாள் கொண்டாட்டத்தைத் தவிர்த்துவிட்டு மக்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். விஜய்க்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்து 2026 தேர்தலுக்கு அச்சாரம் போட்டுள்ளார் சீமான். விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் GOAT திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. விஜய்யின் […]
விஷமுறிவு மருந்து இல்லாததாலே மரணங்கள். எடப்பாடி பகீர் குற்றச்சாட்டு

சட்டமன்றக் கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து விவாதம் நடத்துவதற்கு எடப்பாடியின் அ.தி.மு.க.வினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, இன்றும் வெளிநடப்பு செய்தார்கள். செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ‘’கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய ஹோம்பிசோல் விஷமுறிவு மருந்து ஏற்பாடு செய்யவில்லை என்பதாலே இத்தனை மரணங்கள் என்று நாங்கள் குற்றம் சாட்டினோம். ஆனால், தி.மு.க.வின் அமைச்சரோ, ‘ஒமிபிரசோல்’ மாத்திரை இருப்பதாகக் கூறுகிறார். இது அல்சருக்குத் தரப்படும் மாத்திரை. இப்படி உண்மையை மறைக்கிறது தி.மு.க. அரசு. 183 பேர் பாதிக்கப்பட்டு […]
விஜய்யும் விஷாலும் வந்தாச்சு… சூர்யாவை எங்கேப்பா?

அடுத்த முதல்வர்கள் ரேஸில் தமிழகத்தில் மூன்று நடிகர்கள் இருக்கிறார்கள். விஜய், விஷால் மற்றும் சூர்யா தான் அவர்கள். இவர்களில் விஷால் ஏற்கெனவே தேர்தலில் நிற்க முயன்றார். விரைவில் கட்சியை ஆரம்பித்து அடுத்த தேர்தலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். அதேபோல் விஜய்யும் 2026 தேர்தலுக்குத் தயாராக இருக்கிறார். இவர்கள் இருவரும் கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு குரல் கொடுத்திருக்கும் நிலையில், சூர்யா மட்டும் ஏன் மெளனமாக இருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. விஜய் வழக்கம் போல் அறிக்கையுடன் அமைதியாகிவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், […]
கருப்புச் சட்டை, கண்டன ஆர்ப்பாட்டம், சி.பி.ஐ. விசாரணை. எடப்பாடி பழனிசாமி பலமுனைத் தாக்குதல்

எதிர்க்கட்சித் தலைவராக இத்தனை நாட்களும் அமைதியாக இருந்த எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு கடுமையாக எதிர்ப்பு காட்டி போராட்ட குணம் காட்டியிருக்கிறார். கடந்த ஆண்டு கள்ளச்சாராயம் குறித்து எச்சரிக்கை செய்த பிறகும் ஸ்டாலின் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, ராஜினாமா செய்ய வேண்டும் என்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன் கண்டனம் தெரிவித்தார். அதேபோல், வரும் 26ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அந்த அறிக்கையில், ‘தமிழ் நாட்டில் கள்ளச்சாராய புழக்கத்தை […]
திருச்சி சூர்யா, கல்யாணராமன் நீக்கம். அண்ணாமலை கூட்டத்தில் கடும் மோதல்

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழக பாஜக மாநில மையக்குழு கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அண்ணாமலை ஆதரவாளர் ஒருவரும் எதிர்ப்பாளர் ஒருவரும் கட்டம் கட்டப்பட்டுள்ளனர். இந்த மையக்குழுக் கூட்டத்தில் பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், மகளிர் அணி தேசிய […]
கள்ளச்சாராய சாவுக்குப் போனவர்களும் குடித்து செத்தது எப்படி? அரசு அறிக்கையே காரணமா?

தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியிருக்கிறது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள். தமிழக அரசு அலட்சியமாக இந்த விவகாரத்தைக் கையாண்ட காரணத்தாலே மரண எண்ணிக்கை அதிகரித்ததாக கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு அடுத்த கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் அருந்திய சிலர் வயிற்றுவலி, வாந்தி, மயக்கம் என்று மருத்துவமனையில் அட்மிட் ஆனார்கள். மளமளவென மரணங்கள் நிகழத் தொடங்கின. இந்த நிலையில் மாவட்ட கலெக்டராக இருந்த ஷ்ரவன்குமார் இதனை கள்ளச்சாராய மரணம் என்று அறிவிக்காமல், மெத்தனால் குடித்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள். அதனாலே […]
கடலூர் வாக்காளர்களுக்கு சாபம் விட்ட தங்கர் பச்சான்.

முதன்முதலாக தேர்தல் களத்துக்கு வந்து கடலூர் தொகுதியில் தோற்றுப்போனவர் இயக்குனரும் நடிகருமான திடீர் வேட்பாளர் தங்கர் பச்சான். அவர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்ற பெயரில் வேனில் நின்றபடி வாக்காளர்களைத் திட்டித் தீர்த்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் மக்களவைத் தொகுதி பாஜக கூட்டணியில் இருந்த பாமக சார்பில் களமிறக்கப்பட்டவர் இயக்குநர் தங்கர்பச்சான். தேர்தல் பிரச்சாரத்தின் போது, தான் ஜெயிக்கப் போவது உறுதி என்று பேசி வந்த அவர், தேர்தலில் படுதோல்வி அடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் […]
ராகுலுக்கு 54 வயசு. குவிகிறது பிறந்த நாள் வாழ்த்துகள்

பப்பு என்று பிரதமர் மோடியில் இருந்து அத்தனை தலைவர்களும் கேலி செய்துவந்த ராகுல் காந்தி, இன்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருக்கிறார். ’நாங்கள் விரும்பும் வரையில் தான் மோடி ஆட்சியில் இருக்க முடியும்’ என்று தெறிக்க விடும் ராகுலுக்கு நாடு முழுவதும் இருந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிகின்றன. ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதற்கு ஒரு தெளிவான சித்தாந்தம் வைத்திருக்கிறார் ராகுல் காந்தி. 30 லட்சம் வேலைகள், ஜாதிவாரி கணக்கெடுப்பு, பெண் முன்னேற்றம், விவசாயிகளுக்கு […]
ராமதாஸ்க்கு மாம்பழம் பஞ்சாயத்து. விக்கிரவாண்டி குழப்பம்

எப்படியாவது மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றுவிட வேண்டும் என்று ராமதாஸ் மல்லுக்கட்டினாலும் கடந்த தேர்தலில் 4.23 சதவீத வாக்குகளே கிடைத்தன. அதனால், மாநிலக் கட்சி வாய்ப்பு பறிபோய்விட்டது. இதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாம்பழம் சின்னம் கிடைப்பது கேள்விக்குறியாக மாரியுள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி மறைவால் காலியாக உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிரது. கடந்த 14ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், 21ம் தேதியுடன் […]
60 அரசு கல்லூரிகளில் முதல்வர் இல்லையா..? எப்படி நடக்கும் மாணவர் சேர்க்கை?

மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்களை அறிமுகப்படுத்தி தினம் தினம் புகைப்படம் போட்டுவரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசு கல்லூரிகளுக்கு முதல்வர் நியமனத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் கடந்த பல மாதங்களாக காலியாக உள்ளன. அதனால், கல்லூரியின் அன்றாட நிர்வாகமும் மாணவர் சேர்க்கையும் பாதிக்கப்படுகிறது என்று டாக்டர் ராமதாஸ் குரல் கொடுத்திருக்கிறார். இது குறித்து டாக்டர் ராமதாஸ், […]

