News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அண்ணாமலையை மாத்தினால் அம்புட்டுத் தான். மோடிக்கு ஐ.டி. விங் வார்னிங்

ஆகஸ்ட் மாதம் அண்ணாமலையை அரசியல் படிக்க அனுப்பிவிட்டு, தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை நியமிக்க டெல்லி மேலிடம் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில், அண்ணாமலையை மாற்றினால் தமிழகத்தில் பா.ஜ.க. அழிந்தே போகும் என்று அவரது ஐ.டி. விங் டெல்லிக்கு எச்சரிக்கை விடுக்கும் தொணியில் நிறைய பதிவுகள் வெளியிடத் தொடங்கியுள்ளன. அந்த பதிவுகளில், ‘அண்ணாமலை இல்லையென்றால் ஒருசில தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து கொள்ளும் நிலை உருவாகிவிடும். அதன் பிறகு […]

புதிய அரசியல் கட்சி தொடங்கும் பிரஷாந்த் கிஷோர். அ.தி.மு.க.வுக்கு வேலை செய்வாரா..?

2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமரவைப்பதற்காக பிரபல தேர்தல் வியூக ஆலோசகர் பிரஷாந்த் கிஷோருடன் அ.தி.மு.க. தொடர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அவர் தொடங்கி நடத்திவரும், ‘ஜன சுராஜ்’ அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றும் பிரஷாந்த் கிஷோர் நேரடியாக அடுத்த ஆண்டு பீகார் தேர்தலை சந்திக்க இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஐபேக் எனும் அமைப்பு மூலம் இந்தியாவில் தேர்தல் திட்டமிடுதலுக்கு அடிக்கல் போட்டவர் பிரசாந்த் கிஷோர். பாஜக, ஆம் ஆத்மி, திமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், […]

9 மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள். ஆர்.என்.ரவிக்கு என்னாச்சு?

பலரும் எதிர்பார்க்கப்பட்ட ஆளுநர்கள் நியமனம் நேற்று நள்ளிரவு நடைபெற்றுள்ளது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 9 மாநிலங்களில் ஆளுநர் மாற்றத்திற்கு உத்தரவு போட்டிருக்கிறார். அதன்படி, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு சி.பி.ராதாகிருஷ்ணன் துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. புதிய நியமிக்கப்பட்டுள்ள கே.கைலாசநாதன் குஜராத் முதல்வர் அலுவலகத்தில் 18 ஆண்டுகள் பணியாற்றியவர். மேலும் ஓய்விற்கு பின்னரும் 11 ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்யப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது. இவரது நியமனம் பலத்த […]

மேட்ரிமோனியல் மூலம் பல ஆண்களை ஏமாற்றிய பெண்! கைதானது எப்படி?

மேட்ரிமோனியலில் மணமகன் மற்றும் மணமகள் தேவை என்று மணம் முடிப்பவர்கள் ஏராளம். சொந்தத்தில் இருந்து பெண் மற்றும் மாப்பிள்ளை எடுப்பது அரிதாகிவிட்டது. இதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு ஒரு பெண் தன்வலையில் போலீஸ் எஸ்.ஐ. உள்ளிட்ட பல்வேறு ஆண்களை தன் காதல் வலையில் வீழ்த்தி பல லட்சம் ரூபாய் பணம் நகைகளை சுருட்டிய சம்பவம் கேரள மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் பொய்னாச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 35 வயதான ஸ்ருதி என்ற பெண்ணை சமீபத்தில் […]

இளங்கோவனை திருப்பியடிக்கும் கார்த்தி சிதம்பரம். மீண்டும் காங்கிரஸ் கோஷ்டி மோதல்

காங்கிரஸ் கட்சிக்குள் கொஞ்ச நாட்களாக எட்டிப்பார்க்காமல் இருந்த கோஷ்டி மோதல் மீண்டும் தலை தூக்கியிருக்கிறது. காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியது ஒரு பெரும் பிரச்னையாக உருமாறியது. எனவே தி.மு.க. மேலிடத்திடம் சமாதானம் செய்யவேண்டிய நிலைமை உருவானது. இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் பேசிய பேச்சுக்கு எதிராக இவிகேஎஸ். இளங்கோவன் கடுமையான சூடு போட்டுள்ளார். ‘’தி.மு.க. இல்லை என்றால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான காங்கிரஸ் வேட்பாளர் காத்தி […]

எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆலோசகர் ஆகிறார் பிரஷாந்த் கிஷோர்..? குஷியில் அ.தி.மு.க.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து கடந்த 20 நாட்களாக தொகுதி வாரியாக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று திருப்பூர் மற்றும் கடலூர் மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அனைவரும் கூட்டணி குறித்து பேசினார்கள். அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ‘’கூட்டணி விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நிர்வாகிகள் […]

தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது! கைவிரித்த சென்னை உயர்நீதிமன்றம்!

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தது தமிழக அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் குமரேஷ் என்பவர் பொது நல மனு ஒன்று தொடுத்தார்.   கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷசாராயம் குடித்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து விஷசாராயம் காய்ச்சிய […]

ஒலிம்பிக் விழா நடக்காமல் செய்ய சதி? குழப்பத்தில் சர்வதேச நாடுகள்!

2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடர் இன்று (ஜூலை 26) பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடரில் சர்வதேச நாடுகளில் இருந்து மொத்தம் 10,714 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில் 117 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.   போட்டி தொடருக்கு முன்னதாக அனைத்து விளையாட்டு வீரர்களையும் 600 படகுகளில் செய்ன் நதியில் ஊர்வலமாக அழைத்து செல்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. போட்டிகள் தொடங்க இன்னும் சிறிது […]

நீதிமன்ற உத்தரவை மீறி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள்! மக்கள் அவதி!

ஆம்னி பேருந்துகளை போரூர் சுங்கச்சாவடியில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும் இந்த உத்தரவை மதிக்காமல் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளால் பூந்தமல்லி நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலால் திக்கித்திணறுகிறது. இதனால் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியுறுகின்றனர்.   தென்மாவட்டங்களுக்கு பயணமாகும் ஆம்னி பேருந்துகள் சென்னை கோயம்பேடு முதல் செங்கல்பட்டு மார்க்கமாக இயக்கப்படுகின்றன. ஆம்னி பேருந்துகளை உடனடியாக இயக்காமல், இருக்கைகள் நிரம்பும் வரை நிறுத்தி வைத்து இயக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் […]

பொட்டி பிரேமலதா… வாய்க்கொழுப்பு பேச்சுக்கு வைச்சு செய்யும் உடன் பிறப்புகள்

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உடல் நிலை சரியில்லை. எனவே அவரால் வேஷ்டி கட்டுவதற்கு முடியவில்லை. பேண்ட் போட்டு கையை உள்ளே வைத்துக்கொண்டு அதனை மறைப்பதற்கு முயற்சி செய்கிறார். அவர் உடனே பதவியை தகுதியுள்ளவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று திடீரென குரல் எழுப்பியிருக்கிறார் பிரேமலதா. இந்த பேச்சு உடன்பிறப்புகளுக்கு டென்ஷன் ஆக்கியுள்ளது. ஆகவே, ‘பொட்டி பிரேமலதா’ என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி பிரேமலதாவின் வாய்க்கொழுப்பு பேச்சுக்களை தொடர்ந்து கடுமையாகப் பேசி வருகிறார்கள். சமூகவலைதளங்களில் பிரேமலதா குறித்து, ‘’நடக்க முடியாத,பேச முடியாத […]