ரஜினிகாந்த் இப்படி பேசிட்டாரே… போதையில் இருந்தாரா..?

வட தமிழகத்தைப் புரட்டியெடுத்த ஃபென்சல் புயல் தாக்கம் இன்னமும் மக்கள் மனதிலிருந்து மறையவில்லை. இன்னமும் பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை. திருவண்ணாமலை நிலச்சரிவில் செத்துப்போன குடும்பத்தினரின் கதறல் ஓயவில்லை. ஆனால், அப்படியொரு விஷயமே தமிழகத்தில் நடந்தது தெரியாமல் ரஜினிகாந்த் இருக்கிறார் என்பது அதிர்ச்சியான தகவல். சென்னை விமான நிலையத்தில் இருந்து கூலி படத்தின் அடுத்தகட்ட சூட்டிங்கிற்கு ஜெயப்பூர் செல்வதற்கு வந்தார் ரஜினிகாந்த். அப்போது அவரிடம் ஃபென்சல் புயல் குறித்தும் திருவண்ணாமலை நிலச்சரிவு மரணம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. […]
புயல் நிவாரண நிதியில் அண்ணாமலை சீட்டிங்..? போட்டுத்தாக்கும் அமைச்சர்

ஃபெஞ்சல் புயல் மற்றும் பருவமழை காரணமாக சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பெருத்த சேதங்களை சந்தித்து உள்ளன. புயல் பாதிப்புகளுக்கு தமிழ்நாட்டிற்கு உரிய நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது; இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ‘’ஃபெஞ்சல் புயல் பாதிபுக்காக தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ரூ.944 கோடியை ஒதுக்கி உள்ளது’’ என்று நன்றி தெரிவித்திருந்தார். இரண்டே நாளில் நிதி பெற்றுத்தந்த அண்ணாமலை […]
விஜய் ஒரு தற்குறி: கடுமையாக விமர்சித்த அமைச்சர் சேகர்பாபு!

சென்னையில் நேற்று (டிசம்பர் 6) சட்ட மேதை அம்பேத்கார் புத்தக வெளியீட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், வி.சிக. துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அம்பேத்கர் புத்தகத்தை விஜய் வெளியிட, அம்பேத்கரின் பேரன் அதனை பெற்றுக் கொண்டார். இதற்கிடையில் நாற்காலியில் அமர்ந்தவாறு வடிவமைக்கப்பட்டிருந்த அம்பேத்கார் சிலையுடன் சேர்ந்து விஜய் எடுத்துக் கொண்ட செல்ஃபிக்கள் இணையத்தில் வைரலானது. விழாவில் மிகவும் ஆக்ரோஷமாக பேசிய […]
புஸ்ஸி ஆனந்த் பதவிக்கு ஆபத்து. விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனாவுக்கு வரவேற்பு.

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா எதிர்பார்த்தபடியே அரசியல் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. இனியும் ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் வைத்திருப்பது திருமாவுக்கு நல்லது இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதே நேரம் அவராகவே கட்சியை விட்டு வெளியேற்றடும் என்ற முடிவில் திருமா இருக்கிறார். இந்த புத்தக விழா என்பது பட்டியலின வாக்குகளை குறிவைத்து நகர்த்தப்பட்ட விழாவாகவே இருக்கிறது. ஆகவே, இப்போது அம்பேத்கர் இயக்கம் ஒன்று புதிதாகத் தொடங்கும் முயற்சியில் இருக்கிறார் ஆதவ். அம்பேத்கர் இயக்கத்துக்கு தமிழகம் முழுக்க […]
ஆதவ் அர்ஜூனாவை வெளியேற்ற திருமா பயப்படுவது ஏன்..? இப்படி ஒரு காரணம் இருக்கிறதா..?

மக்களால் தேர்வு செய்யப்பட்ட தி.மு.க. ஆட்சியை மன்னராட்சி என்றும் பிறப்பால் ஒருவரை முதல் அமைச்சர் ஆக்க முடியாது என்று நேரடியாக ஸ்டாலின், உதயநிதியை குறி வைத்துப் பேசியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா. ஆகவே, இதற்கு மேலும் ஆதவ் அர்ஜூனாவை துணைப் பொதுச்செயலாளராகவே வைத்துக்கொண்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், திமுக கூட்டணியில் விசிக தொடர்கிறது என்றும் 2026 தேர்தலிலும் திமுகவுடன் தான் கூட்டணி என்றும் திருமாவளவன் கூறுவதை முடியாது என்று தி.மு.க.வினர் கடுமையான […]
விஜய் புத்தகத்தைப் படிக்கவே இல்லையா..? கூட்டணிக்கு இப்படி ஒரு நாடகமா..?

புத்தக வெளியீட்டு விழா என்றால் அந்த புத்தகம் தொடர்பான கருத்துக்களை முன்வைத்து சிறு விவாதம் நடைபெறும். ஆனால், நீதிபதி சந்துரு தவிர வேறு யாரும், எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் குறித்துப் பேசவே இல்லை. இதன் அர்த்தம் விஜய் இங்கு அரசியல் பேசத்தான் வந்தார், அம்பேத்கர் புத்தகம் பற்றி அல்ல என்று நாம் தமிழர்கள் கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்தி, ‘’பொதுவாகப் புத்தக வெளியீட்டு விழாவின்போது, அதனை […]
12ம் வகுப்பு மாணவனால் தலைமை ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்!

மத்தியபிரதேசத்தில் 12ம் வகுப்பு மாணவன், தலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நவீன யுகத்தில் செல்போனின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதில வரும் பல்வேறு காணொளிகளை பார்த்து பார்த்து இளம்வயதிலேயே மன அழுத்தங்களுக்கு ஆளாகிறார்கள். கல்வியில் கவனக்குறைவு ஏற்பட்டு ஒரு செயலின் வீரியம் மற்றும் பக்கவிளைவு தெரியாமல் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் போதை உள்ளிட்ட தீயப்பழக்கத்திற்கும் ஆளாகின்றனர். அதை நிரூபிக்கும் வகையில் மத்தியபிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் […]
சிவில் சர்வீஸ் தேர்வர்கள் மீது போலீசார் தடியடி!

பீகார் மாநிலத்தில் போராட்டம் நடத்திய தேர்வர்கள் மீது போலீசார் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் முன்பு 70வது சிவில் சர்வீஸ் தேர்வை முன்பு போலவே நடத்தக் கோரி தேர்வர்கள் திடீரென்று ஒன்று கூடி போராட்டம் நடத்தினார்கள். பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்திய தேர்வர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியும் அவர்கள் […]
ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து இன்று வெளியேற்றம்..? மாலையில் கிளைமாக்ஸ்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, ‘’புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த புரிதல் எதுவுமில்லாமல் அரசமைப்புச் சட்டத்தை ஒரு கையிலும் பகவத் கீதையை இன்னொரு கையிலும் வைத்துக்கொண்டு சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற ஒருவரோடு (விஜயோடு) மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றுதான் தலைவர் திருமாவளவன் சொன்னார்’ என்று ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக ஒரு கடுமையான வாதத்தை முன்வைத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ.வான எஸ்.எஸ். பாலாஜி இன்று, ‘’துடுப்பு போடாமல் படகில் கேளிக்கைக்காக அமர்ந்து இருப்பவனால் மட்டுமே படகை […]
விஜய் தான் முக்கியமா..? ஆதவ் அர்ஜுனாவுக்கு திருமா கேள்வி

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. விஜய் கலந்துகொள்ளும் நிகழ்வை திருமாவளவன் புறக்கணித்திருக்கும் நிலையில், அதற்காக ஒரு நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறார். இது அரசியல் சூழ்ச்சி என்று புரிந்து விலகியிருப்பதாகக் கூறியிருப்பவர், என்னை விட விஜய் முக்கியமா என்று விகடன் நிறுவனத்தாருக்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கும் கேள்வி எழுப்பியிருக்கிறார். அந்த அறிக்கையில், ‘’புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து விகடன் பதிப்பகம் வெளியிடும் நூல் இன்று சென்னையில் வெளியிடப்படுகிறது. முப்பத்தாறு பேரின் கட்டுரைகள் தொகுக்கப் பெற்று இந்நூல் வெளிவருகிறது. இதில் […]

