News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

எடப்பாடி பழனிசாமி பதவிக்கு ஆபத்து..? ஓ.பி.எஸ். அணியின் புதிய மிரட்டல்

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பத்தின் மீது ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள விவகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ஜ.க. வைத்துள்ள பலப்பரீட்சையாகவே பார்க்கப்படுகிறது. திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்ய மூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘அதிமுக தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடியும்வரை இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்ததாகவும், ஆனால், மனு மீது […]

உயிர் தப்பிய 145 விமான பயணிகள்! பரபரப்பு தகவல்கள்!

விமானத்தில் திடீர் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதை கண்டறிந்து விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் 145 பயணிகள் உயிர் தப்பிய சம்பவம் சென்னை மீனம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   சென்னை மீனம் பாக்கத்தில் இன்று (நவம்பர் 11) காலை 11.55 மணியளவில் சிங்கப்பூருக்கு செல்லக் கூடிய ஏர் இந்தியா விமானம் 145 பயணிகளுடன் பயணம் மேற்கொள்ள தயாராக இருந்தது. விமானம் புறப்படுவதற்கு முன்னதாக விமானி இறுதிக்கட்ட பரிசோதனை மேற்கொள்வது வழக்கம்.   அதன்படி விமானி இறுதிகட்டமாக பரிசோதனை மேற்கொண்டிருந்த […]

சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் மீட்பு !

சிரியாவில் 2011ஆம்  ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது . அதிபர் பஷார் அல் அசாத் தலைமையிலான அரசுப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான சண்டையில், சில முக்கிய நகரங்கள் கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றன. கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் மோதல் ஏற்படாத நிலையில் , கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது . அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து முன்னேறி தலைநகர் டமாஸ்கசையும் கைப்பற்றினர்.   இதை தொடர்ந்து 50 ஆண்டு கால […]

பாரதிக்கு ஆளுநர் மரியாதை இதற்குத்தானா? சாதி பாடலை திருத்தப் போறாங்க

சாதிகள் இல்லையடி பாப்பா என்று முழக்கமிட்ட சமூக சீர்திருத்தவாதி புரட்சிக்கவி பாரதியாரின் 143வது பிறந்த நாள் விழா இன்று தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ஆளுநர் மாளிகையில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 143வது பிறந்தநாளில் அவரது தீவிர பற்றாளர்களுடன் சேர்ந்து பாரதியின் ஜதி பல்லக்கு ஊர்வலத்தை கவர்னர் தோளில் சுமந்து தூக்கியும், கொடியசைத்தும் துவக்கி வைத்தார். மகாகவி பாரதியாருக்கு ஜதி பல்லக்கு தூக்கும் ஆளுநர் ரவிக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து பாரதியின் ஒரு பாடலை நினைவூட்டி பதிவு […]

விடுதலை சிறுத்தைகள் கட்சி உடைப்பு..? திருமா நிர்வாகிகளை வளைக்கும் ஆதவ் அர்ஜூனா

  விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் நுழைந்ததும் துணைப் பொதுச்செயலாளர் பதவி ஆதவ் அர்ஜூனாவுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து கட்சி நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என்று ஆதவ் அர்ஜூனா கூறிய திட்டத்தை திருமாவளவன் ஏற்றுக்கொண்டார். தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் மாவட்ட செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்கள், கிளை செயலாளர்கள், ஊடக ஒருங்கிணைப்பாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆகியோர் அடங்கிய நிர்வாக குழுவை நியமிக்கும் வேலை ஆதவ் அர்ஜூனாவுக்கு ஒதுக்கப்பட்டது. ஒரு தொகுதிக்கு […]

சபாஷ், சரியான போட்டி. ரிலீஸ் ஆகும் அண்ணாமலை ஃபைல்ஸ்

ஒரு காலத்தில் அண்ணாமலை ஆர்மியில் ஒரு முக்கியப் புள்ளியாக இருந்தவர் திருச்சி சூர்யா. அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்டு எல்லா கட்சியினருடனும் சண்டைக்குப் போய்க்கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்தார். ஆனால், அண்ணாமலை மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பதாகத் தெரியவில்லை என்றதும், அவருடனே மோதத் தொடங்கிவிட்டார். சமீபத்தில் தி.மு.க. ஃபைல்ஸ் 3 வெளியிடப்படும் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார். ஆதாரம் இருந்தால் உடனடியாக வெளியிடலாமே எதற்காக தேர்தல் வரை வெயிட் செய்ய […]

ஒருதலை காதல்: சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

காதலை ஏற்காத சிறுமியை வாலிபர் வீடு புகுந்து எரித்துக் கொலை செய்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரபிரதேச மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் நந்திகோட்கூர் நகரில் 17 வயது சிறுமி தனது பாட்டியுடன் உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் வீட்டிற்குள் 21 வயதான ராகவேந்திரா என்ற வாலிபர் அத்துமீறி நுழைந்தார். இவர் களுகோட்லா கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் கடந்த சில ஆண்டுகளாக காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள சமர்லகோட்டாவை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. சிறுமி […]

அண்ணாமலையின் தி.மு.க. ஃபைல்ஸ் 3 ரெடி. அதானிக்கு எஸ்கேப்

vலண்டனில் இருந்து அண்ணாமலை திரும்பிவந்ததும் படுவேகமாக அரசியல் செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அண்ணாமலை என்னவோ அடக்கியே வாசிக்கிறார். அதேநேரம், தேர்தல் நேரத்தில் தி.மு.க. ஃபைல்ஸ் பார்ட் 3 வெளியிடப்படும் என்று அறிவிப்பு செய்திருக்கிறார். இதை தி.மு.க.வினரே கூட கண்டுகொள்ளவில்லை என்பது தான் ஆச்சர்யமான திருப்பம். அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவராக வந்ததுமே தி.மு.க. அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்தும் ஊழல் ஃபைல்ஸ் வெளியிட்டார். முதல் முறை அவர் வெளியிட்ட ஃபைல் பெரும் பரபரப்பானது. அதையொட்டி […]

விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் தடை… பா.ஜ.க.வுக்கு எதிராகப் போராடுவாரா சீமான்..?

விடுதலைப்புலிகள் இயக்கத்தையே தங்கள் கட்சிக்கு அடையாளமாகப் பயன்படுத்தி வரும் சீமானுக்கு அதிர்ச்சி தரும் வகையில், விடுதலைப் புலிகள் மீதான தடை: மேலும் ஐந்தாண்டுக்கு இந்தியாவில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்துக்கு எதிராக சீமான் போராட்டம் நடத்துவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இலங்கையில் தமிழா்களுக்குத் தனி ஈழம் வழங்கப் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்டு இருந்தது. அந்தத் தடை முடிவுக்கு வரவிருந்த வேளையில் மேலும் ஐந்தாண்டுக்குத் தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டது. […]

ஜெர்மனியில் நடைபெற்ற தமிழ்நாடு தினக் கொண்டாட்டம்! அமைச்சர்கள் பங்கேற்பு!

உலகில் தமிழர்கள் இல்லாத நாடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பரவியிருக்கிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு நாட்டிலும் தமிழர்களின் பண்டிகைகள், தமிழ்மொழியின் கொண்டாட்டங்கள் களைகட்டத்தான் செய்கின்றன. இதில் மற்றொரு விசேஷம் என்னவென்றால், தமிழர்களின் கொண்டாட்டங்களில் அந்தந்த நாட்டு மக்களும் கலந்து கொண்டு மகிழ்ச்சியடைவதுதான்.   அந்த வகையில் ஜெர்மன் நாட்டில் முதல் முறையாக தமிழ்நாடு தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது. ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் நடைபெற்ற தமிழ்நாடு தினக்கொண்டாட்டத்தில் திரளான தமிழர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவினை பிராங்க்பர்ட்டில் […]