கயல் சைத்ரா ரெட்டிக்கு என்ன ஆச்சு?

டிஆர்பி ரேட்டிங்கில் முதல் மூன்று இடங்களை தொடர்ந்து பிடித்து வருவது சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல்தான். அதில் கயல் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சைத்ராரெட்டி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கியுள்ளார். சீரியலில் ஹோம்லியாக காட்சியளிக்கும் இவர், இணையத்தில் மட்டும் தனது தாராளமான புகைப்படங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கேரளாவை மேலும் அழகாக்கிய அமலாபால்!

நடிகை அமலாபாலுக்கு கடந்த வருடம்தான் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பராமரிப்பதற்காக சினிமாவை விட்டு விலகியிருக்கும் அமலாபால், குறைந்த பட்சம் தனது குடும்ப புகைப்படங்களையும் தன்னுடைய கிளாமர் புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கேரளாவில் உள்ள காசர்கோடு என்ற அழகிய இடத்திற்கு சென்ற அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கண்களை கவரும் இப்புகைப்படங்கள் கேரளாவை மேலும் அழகாக்கியுள்ளது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிகில் பட நடிகையா இது? ரசிகர்களை கவரும் ரெபாமோனிகா ஜான்

பிகில் திரைப்படத்தில் அனிதா கதாபாத்திரத்தில் நடிப்பில் அசத்தியிருந்த ரெபா மோனிகா ஜான் தொடர்ந்து பல திரைப்படங்களிலும், ஆல்பங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ரெபாமோனிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெப்சி பாட்டில் ஷேப் அழகி! திவ்யபாரதி ஹாட் ஸ்டில்ஸ்!

ஜி.வி.பிரகாஷ் மற்றும் திவ்ய பாரதியின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கிங்ஸ்டன் படம் வெற்றி பெறவில்லை. என்றாலும், திவ்யபாரதி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு தொடர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.
விஜய்க்குப் பாதுகாப்பு… சீமானுக்கு ஜெயில்..?

அஜித் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள், உடன்பிறப்புகள், நாம் தமிழர் தம்பிகள் ஆகியோருடன் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து சமூகவலைதளங்களில் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு ரஜினி ரசிகர், ‘விஜய் வெளியே வந்தால் முட்டை அடிப்போம்’ என்று கூறியதை அடுத்து உடனடியாக அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஒய் பிரிவு பாதுகாப்பு என்பது ஆயுதம் தாங்கிய 8 -11 சிபிஆர்எஃப் வீரர்கள், காவல்துறை படையினர் ,தமிழகம் முழுவதும் விஜய்க்கு பாதுகாப்பு […]
அ.தி.மு.க.வுடன் விஜய் கூட்டணி உறுதி..? ரசிகர்கள் கடும் எதிர்ப்பு

வரயிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க., சட்டமன்ற எதிர்க்கட்சியான அ.தி.மு.க., புதிதாக அரசியல் களத்தில் குதித்திருக்கும் விஜய் ஆகிய மூவரும் மிகுந்த உறுதியுடன் இருக்கிறார்கள். அதேநேரம் இவர்கள் மூவரும் ஒன்று சேர வாய்ப்பு இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமிக்கும் விஜய்யும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்பதே அரசியல் பரபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் 60 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி ஆகியவை விஜய்க்கு வழங்கப்படுவதாக எடப்பாடி […]
இளையராஜாவுக்கு காப்பிரைட் இல்லை… அதிரவைத்த நீதிமன்றம்

தான் இசை அமைத்த பாடல்களை மேடைக் கச்சேரியில் பாடினாலும் காப்பிரைட் கொடுக்க வேண்டும் என்று இளையராஜா கறார் காட்டியதும், அதனால் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போன்றவர்களுடன் முரண்பாடு ஏற்பட்டதும் உண்டு. ஆனாலும், இளையராஜா இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருந்துவருகிறார். இளையராஜாவின் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தினால் உடனே அவர்களுக்கு இளையராஜா தரப்பில் இருந்து வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்புவது வழக்கம். சமீபத்தில் வெளியான “மஞ்சும்மல் பாய்ஸ்”, தமிழில் வெளியான “96”, “மெய்யழகன்” உள்ளிட்ட பல படங்களின் காட்சிகளில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. “மஞ்சும்மல் […]
பேட் கேர்ள் படத்துக்குத் தடை..? பார்ப்பனர்களுக்கு எதிரான படமா?

வெற்றிமாறன் உதவி இயக்குநர் வர்ஷா பரத் இயக்கியிருக்கும் ‘பேட் கேர்ள்’ படத்தில் ஹிருது ஹாரூன், சாந்தி பிரியா, அஞ்சலி சிவராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனம் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கிறது. பிராமணப் பெண்களை அவமானப்படுத்துவதால், இந்த படத்தை தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லரில் பள்ளி வயதினரின் சேட்டைகள் காட்டப்படுகின்றன. வீட்டில் கட்டுப்பாடுகள் விதித்தால் பெண் பிள்ளைகள் எப்படியெல்லாம் எதிர்வினையாற்றுவார்கள் என்பதை ஒரு பெண் […]
அஜித்துக்கு பத்ம பூஷண்… ஜன நாயகன் விஜய் வாழ்த்து சொல்ல மாட்டாரா..?

விஜய்யை விட அஜித் நாட்டு மக்களுக்காக அப்டியென்ன சேவையாற்றினார்… அவருக்கு எதுக்கு பத்ம விருது என்று விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்துவந்த நிலையில் இன்று அவரது கடைசி படத்தின் முதல் போஸ்டர் வெளியீட்டைக் கொண்டாடி வருகிறார்கள். திரைப்படம் மட்டுமின்றி டிரோன், ரேஸ் என்று பல விஷயங்களிலும் கவனம் செலுத்துபவர். அதோடு எந்தவித பின்புலமும் இன்றி சினிமாவுக்குள் வந்து தன்னுடைய விடாமுயற்சியால் இன்று விஸ்வரூப வெற்றியை பெற்று கோலிவுட்டின் தனிப்பெரும் ஆளுமையாக உருவெடுத்துள்ளார் அஜித்குமார். இவரது திரைப்பயணத்தில் […]
நிலநடுக்கத்தில் நடிகை செய்த துணிச்சலான செயல்! ரசிகர்கள் அதிர்ச்சி!

இன்று (ஜனவரி 7) காலை நேபாள எல்லையையொட்டி ஏற்பட்ட நிலநடுக்கத்தை பொருட்படுத்தாது நடிகை மணிஷா கொய்ராலா செய்த துணிச்சலான விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில் நேபாள எல்லையொட்டி இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்நிலநடுக்கம் 7.1 ஆக பதிவானது. இந்நிலக்கத்தை தொடர்ந்து 6 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளைவிட்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். முக்கியமான பொருட்களை கையில் […]

