Share via:
ஒவ்வொரு தெருமுனையிலும் பானிபூரி கடைகளை எளிதாகக் பார்க்க முடிகிறது. வடமாநிலத் தொழிலாளர்கள் தயாரிக்கும் பானிபூரிக்கென்றே வாடிக்கையாளர்கள் அலைமோதுவதை பல இடங்களில் பார்க்க முடிகிறது.
சிறியவர்கள் முதியவர் பெரியவர்கள் வரை பானிபூரியை விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். அப்படி சாலையோரம் விற்பனை செய்யப்படும் பானிபூரிகள் தரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்கிற கேள்வி எழுந்தாலும், அதை சற்றும் பொருட்படுத்தாமல் பானிபூரியை வாங்கி சுவைப்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் செய்கிறார்கள்.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் சாலையோரம் விற்கப்படும் பானிபூரிகள் தரமற்று இருப்பதாக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
அதைத்தொடர்ந்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் புகார்கள் பெறப்பட்ட சம்பவ இடங்களில் நேரடியாக சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன்படி 260 பானிபூரி மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் முடிவுகள் வெளியாகி தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த முடிவுகளின்படி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 22% உண்பதற்கான பாதுகாப்பு தரத்தை மீறியுள்ளது என்றும் தரமற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அவற்றில் பயன்படுத்தப்படும் செயற்கை நிறமிகள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் அமிலங்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு 18 மாதிரிகள் மனிதர்கள் உண்பதற்கு தகுதியவற்றை என்றும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதைத்தொடர்ந்து இதுபோன்ற சோதனைகள் தமிழகத்திலும் நடத்தப்படுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.