Share via:
காலை முதலே விஜய் மாநாடு களை கட்டி வருகிறது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள்
வந்து மண்டபத்தில் முன்னே உட்கார்ந்துவிட்டார்கள். இந்த நிலையில், விஜயகாந்தின் முதல்
மாநாடு தமிழகத்தில் சாதனை படைத்தது. அதை உடைக்க விஜய்யால் முடியுமா என்பது போல் சவால்
விட்டிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.
விஜய் மாநாடு நடக்கும் சமயத்தில் பிரேமலதா போட்டிருக்கும் பதிவில்,
‘’இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு! மதுரை தேமுதிக முதல் மாநாடு
150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5லட்சர் சேர் போடப்பட்டு நடத்தப்பட்டது! உட்கார இடம் இல்லாமல்
மாநாட்டு பந்தலுக்கு வெளியே லட்சோப லட்ச தொண்டர்கள் குவிந்தனர்! மொத்தம் 25 லட்சம்
பேர் கலந்து கொண்டனர் உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது’’ என்று கூறியிருக்கிறார்.
விஜய் இந்த மாநாட்டுக்கு 5 லட்சம் முதல் 7 லட்சம் வரையிலான தொண்டர்கள்
வரலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறார். இதையொட்டி 5 லட்சம் உணவுப் பொட்டலங்கள் தயார்
செய்யப்பட்டுள்ளன. 7 லட்சம் வந்தாலும் அது வெற்றியாகச் சொல்ல முடியாது’ என்பதற்காகவே
முன்கூட்டியே இப்படியொரு சவால் விடுத்திருக்கிறார்.
பிரேமலதா கூறிய வகையில் 25 லட்சம் தொண்டர்கள் அன்றைய தினம் கூடியது
உண்மையா என்று சம்பந்தப்பட்ட மதுரை நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, ‘அதிகபட்சம் 3 லட்சம்
பேர் வந்திருப்பார்கள். நாங்கள் 1 லட்சம் பேர் எதிர்பார்த்தோம்’ என்கிறார். பொய் சொன்னாலும்
கொஞ்சம் பொருத்தமா சொல்லுங்க பிரேமலதா..?
25 லட்சம் பேர் வந்திருந்தா அவங்களும் அவங்க குடும்பமும் மட்டும்
ஓட்டுப் போட்டிருந்தாலே விஜயகாந்த் முதல்வர் ஆகியிருப்பாரே…