Share via:
வரும் டிசம்பர் 6ம் தேதி விகடன் நிறுவனம் நடத்த இருக்கும், “எல்லோருக்குமான
தலைவர் அம்பேத்கர்” நூல் வெளியீட்டு விழாவில் தொல் திருமாவளவன் கலந்து கொள்ளப்போவதில்லை
என்று முடிவு எடுத்திருப்பது விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்களை அதிர வைத்துள்ளது. இந்த
முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நிர்வாகிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இது குறித்துப் பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய
நிர்வாகி ஒருவர், ‘’நீங்கள் விஜய் பங்கேற்கும் விழாவில் நீங்கள் கலந்துகொண்டால் கூட்டணியில்
குழப்பம் ஏற்படும்’ என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதால் நூல் வெளியீட்டு விழாவில்
கலந்து கொள்ளப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார். அம்பேத்கர் நூலை வெளியிடாமல்,
அரசியல் காரணங்களுக்காக திருமாவளவன் புறக்கணிப்பது, அம்பேத்கருக்கு செய்யும் அவமானம்
என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு வருடத்துக்கு முன்பு அவர் ஒப்புக் கொண்ட நிகழ்ச்சி என்று சொன்னவரே
இப்போது முக ஸ்டாலின் கேட்டுக் கொண்டால் நிகழ்ச்சியை புறக்கணிப்பதாகச் சொல்கிறார்.
அவர் தலித் மக்களுக்காகவும், அவர்கள் நலனுக்காகவும் கட்சி நடத்துகிறாரா அல்லது முக
ஸ்டாலின் குடும்ப நலனுக்காக கட்சி நடத்துகிறாரா என்பது புரியவில்லை.
தி.மு.க.வினர் செய்வதை தட்டிக் கேட்கும் துணிச்சல் திருமாவுக்கு
இருக்கிறதா..? பா.ஜ.க. வந்துவிடக் கூடாது என்று சொல்லியபடியே ராஜ்நாத் சிங்கை வரவழைத்து
நாணயம் வெளியிடுகிறார்கள். சண்டை போட்டுக்கொண்டே திமுக மட்டும் ஆளுநரின் தேநீர் விருந்தில்
பங்கேற்கிறார்கள்.
ஆனால், நேற்று கட்சி துவங்கிய விஜய்யுடன் திருமா பங்கேற்றால் கூட்டணியில்
குழப்பம் வந்துவிடுமா? விஜய்யுடன் மேடையை பகிர்ந்தால் கூட்டணிக்குள் குழப்பம் வரும்
என்ற அளவிற்கா கூட்டணிக்குள் முதிர்ச்சியும், பக்குவமும், புரிதலும் இருக்கிறது? விஜய்யுடன்
விழாவில் கலந்துகொள்ளுங்கள். கூட்டணி குறித்து பின்னர் பார்க்கலாம்’’ என்கிறார்கள்..
திருமாவளவன் என்ன முடிவு எடுப்பார் என்று பார்க்கலாம்.