News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் என்பார்கள். அதுவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மீது மக்கள் எக்கச்சக்க நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவரது வீட்டுக்கு பிரதமர் நரேந்திரமோடியை அழைத்திருப்பதும் விநாயகர் சதுர்த்தி பூஜை நடத்தியிருப்பதும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உச்சநிதிமன்ற தலைமை நீதிபதிகளை பொது நிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகள் சந்திப்பதையும் பேசுவதையும் யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆனால், பிரதமர் நரேந்திரமோடி உச்சநீதிமன்ற நீதிபதியின் வீட்டுக்குச் சென்று பூஜையில் கலந்துகொண்டிருப்பதை ஜனநாயகத்தின் மீது விழுந்திருக்கும் அடி என்றே பார்க்க வேண்டியிருக்கிறது என்கிறார் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்.

இது குறித்து கேள்வி எழுப்பியிருக்கும் பிரசாந்த் பூஷன், ‘’தலைமை நீதிபதி சந்திரசூட், தனி சந்திப்புக்காக பிரதமர் மோடியை வீட்டுக்கு வரவேற்றிருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. நிர்வாகத்திடமிருந்து குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத்தர வேண்டிய இடத்தில் இருக்கும் நீதித்துறைக்கு, இந்த செயல் தவறான முன்னுதாரணம். நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கும் நீதித்துறையினருக்கும் தூரம் இருக்க வேண்டும் என்று சொல்வது இதனால் தான்’’ என்று கடுமையாக சாடியிருக்கிறார்.

இதையடுத்து, ‘’உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தானாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்து சேவை செய்யலாம்’’ என்று பலரும் குரல் எழுப்புகிறார்கள்.

கடந்த செப்டம்பர் 8 தேதி விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டில் இருந்து ஓய்வு பெற்ற 30 நீதிபதிகள் கலந்து கொண்டுள்ளனர் . இந்தக் கூட்டத்தில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக் வால் கலந்து கொண்டுள்ளார்.. இந்த லட்சணத்தில் இருந்ததால் தான் கடந்த 30 வருடங்களாக இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டிய நீதி கிடைப்பில் கிடக்கிறது என்று வேதனைப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link