Share via:
மே மாதம் என்றாலே ஈழத் தமிழர்கள் துக்க மாதமாக அறிவித்து பல்வேறு
நிகழ்வுகளை நடத்திவருகிறார்கள். எல்லோரும் துக்கம் அனுஷ்டிக்கும் தருணத்தில் சீமான்
சாட்டை அலுவலகத்திற்கு திறப்பு விழா நடத்தி கொண்டாட்டம் நடத்தியிருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இதுகுறித்து முன்பு நாம் தமிழர் இயக்கத்தில் பயணித்த வியனரசு,
‘’ சாட்டை அலுவலக திறப்பு வாழ்த்துகள். இந்திய தேசியத்தில் பயணித்த ஐயா. திராவிடம்
வழங்கிய தகைசால் தமிழர்விருது சரி ஏற்போம் .தமிழ்த் தேசிய வலையொளி. தமிழ்த் தேசியர்களைக்
காணவில்லை. நா.த.க. ஆதரவு ஆதித்தமிழர் பொதுச் செயலாளர் அண்ணன் அ.வினோத் அவர்களையாவது
அழைத்திருக்கலாம்,புறக்கணிப்பு ஏன்’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும், இனப்
படுகொலை துன்ப வலிமிகுந்த இந்த “மே” திங்களில் விழா, இன்பச்சுற்றுலா மகழ்ச்சி என்பதெல்லாம்
உலகத் தமிழ்த்தேசிய உலகில் கிடையாது. இந்த நேரத்தில் இப்படியொரு விழா நடத்த வேண்டுமா
என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதோடு அமீர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டது நாம் தமிழர் தம்பிகளிடம்
குழப்பத்தை உருவாக்கியிருக்கிறது. அமீர் படத்துக்கு சீமான் போறதும், சாட்டை நிகழ்ச்சிக்கு
அமீர் வருவதும் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை என்று தம்பிகள் தடுமாறிகிறார்கள்.