Share via:
சவுக்கு சங்கரை சிறையில் தள்ளியிருக்கிறார்கள், கையை உடைத்திருக்கிறார்கள்.
இது எல்லாமே அவர் பொய்யான செய்தியை பரப்பியதால் நடந்திருக்கிறது. அது போல் அண்ணன் சீமானை
கைது செய்ய முடியுமா என்று சவால் விட்டிருக்கிறார் சாட்டை துரைமுருகன்.
சவுக்கு சங்கர் கைதுக்கு ஆதரவாக ஒரு வீடியோ வெளியிட்டிருக்கும்
சாட்டை துரைமுருகன், ‘சவுக்கு சங்கரை பார்த்து எல்லோரும் பயப்படுறாங்கன்னு சொன்னார்.
அவரைப் பார்த்துப் பயந்தா கையை உடைக்க முடியுமா? அண்ணன் சீமான் இருக்கிறார். அவர் மீது
தொடர்ச்சியா எத்தனை வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. அவரை சிறையில் வைத்து கையில் கட்டுப்
போட வைக்க முடியுமா? அதற்கு வாய்ப்பே கிடையாது.
அதனால் எதையும் எழுதும் போது கவனமாக எழுதுங்கள். தவறான கருத்துக்களை
யார் பரப்பினாலும் கைது செய்வார்கள். விழிப்புடன் இருங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வீடியோவில் எதற்காக இவர் தேவையில்லாமல் சீமானை கைது செய்ய
முடியுமா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் என்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது. எனென்றால்
இப்படித்தான் சவுக்கு சங்கர் பேசினார். என்னை கைது செய்ய முடியுமா? என் கையை உடைக்க
முடியுமா என்றெல்லாம் கேட்டிருந்தார்.
என்னமோ நடக்கப் போகுது.