இப்போது யாரும் மணி பர்ஸில் பணம் வைப்பதில்லை, அதனால் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் சீட்டிங் செய்து பணம் சம்பாதிப்பவர்கள் அதிகரித்து வருவதாக சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் பிறரை சுரண்டுவதற்கு அதிநவீன யுக்திகளை பலரும் கையாள்கிறார்கள். மூத்த அரசு அதிகாரிகள், தனிநபர் போன்று போலியாக சுயவிபரங்களை, அடையாள அட்டையை உருவாக்கிக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்.

இந்த மோசடிகள் பெரும்பாலும் சமூக ஊடக கணக்குகள் அல்லது தனிநபர்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் பிற ஆன்லைன் தளங்களில் இருந்து தகவல்களை சேகரித்துக்கொள்கிறார்கள். இப்படி சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு ஃபேஸ்புக்,, ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடகத் தளங்களில் போலி சுயவிபரங்களை நுட்பமாக உருவாக்குகிறார்கள்.

தங்களை மூத்த அரசு அதிகாரிகள், தலைமை நிர்வாக அதிகாரிகள் என்று நம்பகத்தன்மையை உருவாக்கும் வகையில் போலி ஆதாரங்களை உருவாக்கி, சம்பந்தப்பட்ட நபர்களின் நம்பிக்கையைப் பெறுகின்றனர்.

குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவசர மருத்துவச் செலவுகள், எதிர்பாராத சட்டச்சிக்கல் போன்ற காரணங்களைச் சொல்லி நிதியுதவி நாடுவது  போன்று அவசர உணர்வையும் பீதியையும் உண்டாகி உளவியல் தந்திரங்களைப் பயன்படுத்தி பணத்தை மோசடி செய்கிறார்கள்.

கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்த வகைய்ல் 1376 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த மோசடிகளில் இருந்து தப்பிக்கும் வழியையும் காவல் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சமூக ஊடகங்களில் தனியுரிமை அமைப்புகளை மதிப்பாய்வு செய்துகொள்ளுங்கள். அவ்வப்போது பாஸ்வேர்டுகளை மாற்றிக்கொண்டே இருங்கள். வழக்கத்திற்கு மாறான கோரிக்கையையும் சரிபாருங்கள். தெரிந்த  மின்னஞ்சல் முகவரிகள் அல்லது அதிகாரபூர்வ தொலைபேசி எண்கள் போன்ற நம்பகமான தொடர்பு இருந்தால் மட்டுமே பயன்படுத்துங்கள்.

மோசடியில் சிக்கிவிட்டதாக உணர்ந்தால் உடனடியாக சைபர் கிரம் கட்டணமில்லா உதவி எண் 1930க்கு டயல் செய்து புகார் தெரிவியுங்கள் அல்லது என்ற இணையத்தில் புகாரை பதிவு செய்யுங்கள்.

ஜாக்கிரதை மகக்லே…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link