Share via:
அமைச்சரவை மாற்றம் நடக்கப் போகிறது என்பது தான் தலைமைச் செயலகம்
தொடங்கி சமூகவலைதளம் வரையிலும் பரபரப்பு பேச்சாக இருக்கிறது. மூத்த அமைச்சர் ஒருவர்
மற்றும் வேறு இரண்டு அமைச்சர்களுக்கு பதிலாக மூன்று புது முகங்களுக்கு அமைச்சர் பதவி
கொடுக்கப்பட இருக்கிறது. அமைச்சர்களுக்காகன துறை மாற்றங்களும் பெரிய அளவில் இருக்கும்
என பலரும் ஆருடம் சொல்லி வருகிறார்கள்.
தமிழ்நாடு முதல்வராக முதல்வர் ஸ்டாலின் பதிவியேற்றது முதல் இதுவரை
2 முறை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மரணம், ஆம்ஸ்ட்ராங்
கொலை என தொடர்ந்து சட்ட ஒழுங்கு பாதுகாப்பு மீது விமர்சனங்கள் தொடர்ந்து வந்த நிலையில்
பல்வேறு அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். தமிழக தலைமை செயலாளர் மற்றும் முதல்வரின்
தனி செயலர்களும் அடுத்தடுத்து மாற்றம் செய்யப்பட்னர்.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும் என்ற
தகவல் வெளியான நிலையில் அதற்கு மூத்த அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்து வந்தனார்.
தேர்தலை முன்னிட்டு மீண்டும் பழனிவேல் தியாகராஜனை முக்கியப் பதவிக்குக் கொண்டுவர வேண்டும்
என்று பலரும் கோரிக்கை வைத்துவருகிறார்கள். அதேபோல் கோவி செழியன், ஆவடி நாசர், பனைமரத்துப்பட்டி
ராஜேந்திரன் ஆகியோருக்குப் பதவி கொடுக்க இருப்பதாக பேசப்படுகிறது.
ஆனால், செந்தில் பாலாஜி விடுதலை ஆனபிறகே அமைச்சரவை மாற்றம் செய்ய
வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறாராம். அதனால் தான் இன்று ஸ்டாலினிடம்
அதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, ‘எனக்கு அப்படி செய்தி எதுவும் வரவில்லை’ என்று கூறியிருக்கிறார்.
அமெரிக்கா சென்று திரும்புவதற்குள் செந்தில் பாலாஜி ரிலீஸ் ஆகிவிடுவார்
என்பதால், அதன்பிறகு மாற்றங்கள் செய்வதற்கு இருக்கிறாராம்.