Share via:

கேரளா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் நடைபெற இருந்த இடைத்தேர்தல்களின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு மூலம் அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:&
* கேரளா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசங்களில் நடைபெற இருந்த இடைத்தேர்தல்களின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* அதன்படி 3 மாநிலங்களில் 14 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* மேற்கண்ட 3 மாநிலங்களில் வரும் 13ம் தேதி (புதன்கிழமை) நடைபெற இருந்த 14 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வரும் நவம்பர் 20ம் தேதி (புதன்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* இடைத்தேர்தல் ஒருவார காலம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.