Share via:
தினந்தோறும் ஏழுமலையானை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி செல்வது வழக்கம். காசுக்கடவுளான ஏழுமலையானை காண வரும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையும், அங்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டு குறித்த செய்தியுமே அக்கோவிலின் சிறப்பம்சங்களை விளக்கும்.
சாதாரண நாட்களிலேயே இப்படியென்றால், பெருமாளுக்கு விசேஷமான புரட்டாசி மாதம் என்றால் கேட்கவேண்டுமா? லடசக்கணக்கான பக்தர்கள், ஏழுமலையானின் தரிசனம் வேண்டி பல மணிநேரம் கால்கடுக்க காத்திருந்து குடும்பத்துடன் தரிசித்து மகிழ்வார்கள். அப்படிப்பட்ட பக்தர்களுக்கான செய்திதான்இது.
திருப்பதிக்கு செல்வற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விழுப்புரம், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து மதுரை, சென்னை, தென்காசி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தாலும், திருப்பதிக்கு நேரடியாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்து வந்தது பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியிருந்தது.
பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் கம்பத்தில் இருந்து திருப்பதிக்கு அரசு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தினமும் மாலை 6 மணிக்கு புறப்படும் அரசு பேருந்தானது காலை 8 மணியளவில் திருப்பதியை சென்றடைகிறது. அதே போல் மறுமார்க்கமாக திருப்பதியில் இருந்து தினமும் மாலை 5 மணிக்கு இயக்கப்படும் பேருந்தானது மறுநாள் காலை 8 மணியளவில் கம்பம் வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணக்கட்டணம் ரூ.700 என்பதும், கம்பத்தைச் சேர்ந்த பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.