Share via:
எதிர்க்கட்சித் தலைவராக இத்தனை நாட்களும் அமைதியாக இருந்த எடப்பாடி
பழனிசாமி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு கடுமையாக எதிர்ப்பு காட்டி போராட்ட
குணம் காட்டியிருக்கிறார்.
கடந்த ஆண்டு கள்ளச்சாராயம் குறித்து எச்சரிக்கை செய்த பிறகும்
ஸ்டாலின் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, ராஜினாமா செய்ய வேண்டும் என்று சம்பவ
இடத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன் கண்டனம் தெரிவித்தார்.
அதேபோல், வரும் 26ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
அந்த அறிக்கையில், ‘தமிழ் நாட்டில் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய,
கையாலாகாத விடியா திமுக அரசைக் கண்டித்தும்; கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில்
கள்ளச் சாராயம் அருந்தியதால் பலர் பலியான சம்பவத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று சட்டம்-ஒழுங்கை
பாதுகாக்கத் தவறிய முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும்; அனைத்திந்திய
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில், மாவட்ட
ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
அதோடு விசாரணைக் கமிஷன் போட்டு விஷயத்தை ஆறப்போடுவது சரியாக இருக்காது,
சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்றும் நீதிமன்றத்தை அணுக இருக்கிறார். சரியான சமயத்தில்
தி.மு.க. மீது அதிரடி பாய்ச்சல் நடத்தி தன்னை சரியான எதிர்க்கட்சித் தலைவராகக் காட்டிவருகிறார்
எடப்பாடி பழனிசாமி.
இந்த நேரத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் நின்றிருந்தால் ஜெயித்திருக்கலாம்
என்று இப்போது வருத்தப்படுகிறாராம்.