Share via:

ராமநவமியை முன்னிட்டு தமிழகம் வருகிறார் மோடி. ராமநவமியை முன்னிட்டு
வக்பு சட்டத்திருத்த மசோதாவை அவசரம் அவசரமாக ஜனாதிபதி கையெழுத்துப் போட்டு அமல்படுத்தியிருக்கிறார்.
முழுக்க முழுக்க இந்து பிரதமராக தன்னை முன்னிலைப்படுத்தத் தொடங்கியிருக்கும் நரேந்திர
மோடிக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் தி.மு.க.வினர் அமைதி
காப்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
பாம்பன் ரயில்வே பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும், புதிய ரயில்
சேவையை துவக்கி வைக்கவும் தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு காங்கிரஸ்
கட்சியினர் கருப்புக்கொடி காட்டி தமிழகம் முழுக்க போராடி வருகிறார்கள். எப்போதும் முதல்
ஆளாக கோ பேக் மோடி என்று ஹேஸ்டேக் பரப்பும் தி.மு.க.வின் டீம் இந்த முறை அமைதியாக வாய்
பொத்தி நிற்கிறது.
இது குறித்து திருமுருகன் காந்தி, ‘’தமிழர்களை வஞ்சிக்கும் மோடிக்கு
கருப்பு கொடி காட்டுகிறேன். தமிழர்களின் வரிப்பணம் என்னாச்சு, வக்பு உரிமை என்னாச்சு.
நீட் ரத்து என்னாச்சு, மீனவர் உரிமை என்னாச்சு என்று கேள்வி கேட்கிறோம். திரும்பி போ, திரும்பி போ என்று மோடிக்கு கருப்பு
கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் இருக்கிறோம். ஆனால், எங்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள
வரும் தோழர்களை எல்லாம் காவல்துறை தடுத்து நிறுத்துகிறது.
அப்படியென்றால் தமிழகத்தில் இயங்குவது திமுக அரசின் காவல்துறையா
அல்லது பாஜகவின் காவல்துறையா? மோடிக்கு எதிரான போராட்டத்தை முடக்க முனைவது எதனால்?
திமுக பதில் அளிக்க வேண்டும்’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதற்கு தி.மு.க.வினர் யாரும் பதில் சொல்வதாக இல்லை.