Share via:
![](https://tamilnewsnow.com/wp-content/uploads/2024/01/car.jpg)
முன்னாள் முதல்வர் கருணாநிதி திடீரென மஞ்சள் நிற துண்டுக்கு
மாறிய நேரத்தில், அது ஜோதிட பரிகாரம் என்று அழுத்தமாக கூறப்பட்டது. அதற்கு கருணாநிதி
பல்வேறு காரணங்களைக் கிண்டலாகக் கூறினாரே தவிர, மிகத்தெளிவான பதில் தரவில்லை.
ஸ்டாலின் பதவிக்கு வந்ததில் இருந்து பல்வேறு நிகழ்வுகளும் ஜோதிடத்தின்
அடிப்படையிலே நடக்கின்றன. பதவியேற்பு, அமைச்சரவை கூட்டம், பயணம் என்று எல்லாமே நல்ல
நேரம் பார்த்தே செய்யப்படுகிறது. உதயநிதிக்கு உடனடியாக அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதன்
பின்னணியிலும் ஜோதிடமே இருந்ததாகச் சொல்வார்கள்.
இந்த நிலையில் இந்த மாதம் 17ம் தேதி மாலை கும்ப ராசிக்குள் சனிபகவான்
அமர்கிறார். நிகழும் சுபகிருது வருடம் தை 3-ம் நாள் கிருஷ்ணபட்சத்து தசமி திதி, விசாகம்
நட்சத்திரம், கண்டம் நாமயோகத்தில், பவம் நாமகரணத்தில், நேத்திரம், ஜுவனம் நிறைந்த மந்தயோகத்தில்
காணும் பொங்கல் திருநாளில் நம்மைக் காப்பதற்காக மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குள்
குடி பெயர்கிறார். வாக்கியப் பஞ்சாங்கப்படி 29.03.2023 அன்று மாறுகிறார்.
இந்த சனி பெயர்ச்சி பலன் ஸ்டாலினுக்கு அத்தனை சிறப்பாக இல்லையாம்.
ஆகவே, சனி பகவானை திருப்தி படுத்தும் வகையில் கருப்பு நிறத்தை பயன்படுத்துமாறு ஜோதிடர்கள்
கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் அவருடைய பார்வையில் எப்போதும் பட்டுக்கொண்டிருக்கும்
பாதுகாப்பு வாகனங்களுக்கு கருப்பு வண்ணம் பூசுமாறு
ஆலோசனை கூறப்பட்டுள்ளது. இதுதான் செக்யூரிட்டி வாகனங்களுக்கு கருப்பு நிறம் பூசப்பட்டுள்ளது.
இந்த கருப்பு நிறம் வக்ர சனிக்கு பரிகாரமாக அமையுமாம்.
காருக்கு கருப்பு பூசுறதைவிட, ஸ்டாலினுக்கு கருப்பு கண்ணாடி
போட்டாலே போதும். எல்லாம் கருப்பா தெரியும்… சனியும் சந்தோஷமாகிடுவாரே…