Share via:
பாட்டாளி மக்கள் கட்சிக்குள் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில்
கடுமையான அதிகார யுத்தம் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக அன்புமணி பக்கம் இருக்கிறது
என்பதைச் சொல்லும் வகையில் தேர்தல் ஆணையம் அன்புமணி முகவரிக்கு அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.
இதையடுத்து ராமதாஸ் என்ன மூவ் எடுக்கப்போகிறார் என்பது பரபரப்பாக மாறியிருக்கிறது.
கடந்த 2024 மக்களவைத் தேர்தல் சமயத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது
என்பதில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் பாமகவின்
இளைஞர் சங்கத் தலைவராக தனது பேரன் முகுந்தனை அன்புமணி ராமதாஸ் நியமனம் செய்தார். ஆனால்,
இதனை ஏற்காத அன்புமணி அப்போதே அதிருப்தியை வெளிப்படுத்தினார். ராமதாஸ் ஆக்ரோஷமாக பேச,
அன்புமணி மைக்கை தூக்கிப்போட்டு விட்டு வெளிநடப்பு செய்தார்.
இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து
நீக்குவதாகவும், அவரை செயல் தலைவர் பதவியில் நியமித்துவிட்டு, தலைவர் பதவியை தானே எடுத்துக்கொள்வதாக
ராமதாஸ் அறிவிப்புவெளியிட்டார். இதை கண்டுகொள்ளாத அன்புமணி, பொதுக் குழுவில் தான் தலைவராக
தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவும், தானே தலைவராக தொடர்வேன்
என்றும் அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில்தான் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின்
பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் அன்புமணி ராமதாஸ் தலைமையில்
இயங்கும் பாமக தலைமை அலுவலகமான திலக் தெரு முகவரி இடம்பெற்றுள்ளது. பாமகவின் தலைமை
அலுவலகம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் தான் இயங்குகிறது என்று ராமதாஸ்
ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அன்புமணி அலுவலகத்தின்
முகவரியை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் அன்புமணிக்கு
பாஜக ஆதரவு தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது. இதை ராமதாஸ் எளிதில் எடுத்துக்கொள்ள மாட்டார்
என்கிறார்கள். இந்த வாரம் புதிய அதிரடி அரங்கேறும் என்கிறார்கள். அன்புமணி யோசிக்காத
வகையில் அந்த நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்கிறார்கள். அந்த ரகசியத்தை அறிய அத்தனை
பேரும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.