News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் பேச்சுவார்த்தை நடத்தியபிறகு திமுக கூட்டணிக்குத் தாவிய பிரேமலதா மீது ஆளும் பாஜக அரசு கடும் கோபத்தில் இருக்கிறது. எனவே, இந்த தேர்தலில் முரசு சின்னத்தை முடக்கும் வேலை நடப்பதாக சொல்லப்படுகிறது.

கடந்த 2005 ஆம் ஆண்டு விஜயகாந்த், தேமுதிக எனும் கட்சியை தொடங்கினார். இதைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து களமிறங்கியது. அப்போது விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். 2006 சட்டமன்றத் தேர்தல் (தனித்து போட்டி, 234 தொகுதிகள்): 8.38% வாக்குகள். வெற்றி: 1 இடம் (விருத்தாசலம் – விஜயகாந்த்). இது தேமுதிகவின் உச்சகட்டம்; மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்தது.

2011 சட்டமன்றத் தேர்தல் (அதிமுக கூட்டணி, 41 தொகுதிகள்): 7.88% வாக்குகள். வெற்றி: 29 இடங்கள். எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் பதவி வகித்தார். 2016 சட்டமன்றத் தேர்தல் (மக்கள் முன்னணி கூட்டணி, 104 தொகுதிகள்): 2.39% வாக்குகள். வெற்றி: 0 இடங்கள். பெரும் சரிவு ஏற்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தல் (அதிமுக கூட்டணி, 60 தொகுதிகள்): 0.43% வாக்குகள். வெற்றி: 0 இடங்கள். வாக்கு வங்கி மிகவும் குறைந்தது.

இந்த நிலையில் தேமுதிகவுக்கு இதுவரை சின்னம் ஒதுக்கப்படவில்லை. முரசு சின்னத்தில் போட்டியிட்டு வந்த நிலையில் மக்கள் நீதி மய்யம், தவெக ஆகிய கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் தேமுதிகவுக்கு மட்டும் இன்னமும் சின்னம் ஒதுக்கப்படவில்லை.

முரசு சின்னம் கிடைக்காத பட்சத்தில் சுயேட்சை சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ஏற்படும். அது, எந்த வகையிலும் கூட்டணிக்குப் பயனில்லை என்று திமுக நினைக்கிறது. எனவே, உதயசூரியன் சின்னத்தில் நிற்கவேண்டும் என்று கேட்பதற்கு வாய்ப்பு உண்டு.

மாம்பழம் சின்னத்தை முடக்கவேண்டும் என வழக்கு போட்ட ராமதாஸின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில்தான் தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இரண்டு பேருக்கும் பாஜக செக் வைத்திருப்பதாகத் தெரிகிறது.

என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link