Share via:
சவுக்கு சங்கர் வீட்டில் மலம் வீசப்பட்ட
சம்பவத்திற்குப் பிறகு தனது மீடியாவை இழுத்து மூடிவிட்டுச் சென்ற சவுக்கு சங்கர் மீண்டும்
திரும்ப வந்திருக்கிறார். இப்போது அவர் முழுக்க முழுக்க அ.தி.மு.க. பக்கம் சாய்ந்திருப்பது
தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
அவரது வீடியோக்கள் மீண்டும் வைரலாகின்றன.
‘’பா.ஜ.க.வுக்கு 75 சீட், 80 சீட் இரண்டு துணை முதல்வர்கள் என்றெல்லாம் பேசிக்கொண்டு
இருக்கிறார்கள். உண்மையில் அப்படி எதுவும் கிடையாது. பா.ஜ.க.வுக்கு மொத்தமே 25 சீட்
மட்டுமே தருவதாக எடப்பாடி பழனிசாமி வாக்கு கொடுத்திருக்கிறார். அந்த 25 சீட்டுக்குள்
ஓ.பன்னீர்செல்வமும் அடக்கம். அவருக்கு நான் சீட் தரமாட்டேன் என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்.’’
என்று எடப்பாடி பழனிசாமிக்கு பயங்கர பில்டப் கொடுத்திருக்கிறார்.
அதேபோன்று பிரசாந்த் கிஷோர் ஏன் நீக்கப்பட்டார்,
டிடிவி தினகரன் நிலவரம் என்னாச்சு என்பதையும் பேசி வீடியோ போட்டிருக்கிறார். எடப்பாடி
பழனிசாமி அளவுக்கு ஒரு தலைவர் வேறு யாரும் இல்லை எனும் ரேஞ்சுக்கு சவுக்கு சங்கர் கொடுத்துவரும்
பில்டப்பைப் பார்த்து அ.தி.மு.க.வினரே அலறுகிறார்கள்.
இப்படித்தான் கடந்த தேர்தலில் எடப்பாடி மீண்டும்
ஜெயித்து முதல்வராக வருவார் என்று இவர் பேசியதை நம்பி ஏமாந்து போனார். மீண்டும் இவரா,
இனியும் இவர் சொல்வதை நம்புவார்களா என்று புலம்புகிறார்கள்.