Share via:
![](https://tamilnewsnow.com/wp-content/uploads/2024/04/seeman.jpg)
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும் நாம் தமிழர் சீமானுக்கும்
நாளுக்கு நாள் மோதல் வலுப்பெற்று வருகிறது. மூன்றாவது இடம் யாருக்கு என்பதற்கான மோதல்
இதுவென சொல்லப்படும் நிலையில் செய்தியாளர்களிடம் இன்ஸ்டாகிராம் பற்றி பேசி பரபரப்பு
கிளப்பியிருக்கிறார் சீமான்.
சீமான் செய்தியாளர்களிடம், ‘இப்போது சுமார் 3 கோடியே 90 லட்சம்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்போதுதான் ஒரு இடத்தில் பிடித்திருக்கிறார்கள், அப்படி
என்றால் மற்ற இடங்களில் பணம் கொடுக்கவில்லையா? பணம் செல்லவில்லை என்று அர்த்தமா? ஓட்டுக்கு
பணம் கொடுக்கும் வேட்பாளர்களை 10 ஆண்டு தடை செய்ய வேண்டும். இப்போது ஏதோ ஒரு இடத்தில்
தான் பிடித்திருக்கிறார்கள். ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டோம் என சொன்னவர் எங்கள் தம்பி
அண்ணாமலை அவர்தான் இதற்கு பதில் கொடுக்க வேண்டும்.
சமூக வலைதளங்களில் நாம் தமிழர் தம்பிகள் அதிகம் புழங்குகிறார்கள்.
இதையே இன்ஸ்டாகிராமில் கட்சி நடத்த முடியாது என்று அண்ணாமலை கூறி வருகிறார். டிக் டாக்
ஐ போன்று இதையும் தடை செய்து விடுவார்கள் போல. கேட்டால் அதில் நாங்கள் தவறான தகவலை
பரப்புகிறோம் என்கிறார்கள் இவர்கள் செய்வதை தானே நாங்கள் பரப்புகிறோம். விட்டா இமெயில்,
இன்ஸ்டாகிராம் எல்லாம் வரும் காலத்தில் தடை செய்ய வாய்ப்பு இருக்கிறது’’ என்று அண்ணாமலையை
போட்டுத் தாக்கியிருக்கிறார்.