Share via:
தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நினைத்தாலே பெருமையாக இருக்கிறது என்று பா.ஜ.க. பெண் நிர்வாகி அலிஷா அப்துல்லா புகழ்ந்து தள்ளியிருப்பது அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்து பார்முலா4 இரவு நேர ஸ்ட்ரீட் கார் பந்தயமானது புயல் மற்றும் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்பந்தயத்திற்கான அனைத்து ஏற்பாடுளையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்ட ஆணையம் செய்திருந்தநிலையில் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்பட்ட பார்முலா4 இரவு நேர ஸ்ட்ரீட் கார் பந்தயம் பல்வேறு மாநில விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பல்வேறு சட்டப்போராட்டங்களுக்கு பின்னர் பார்முலா4 இரவு நேர ஸ்ட்ரீட் கார் பந்தயம் நேற்று முன்தினம் சனிக்கிழமை (அக்டோபர் 31ம்தேதி) வெற்றிகரமாக நடைபெற்றது. சென்னைத் தீவுத்திடலை சுற்றியுள்ள ராஜாஜி சாலை, நேப்பியர் சாலை, சிவானந்தா சாலை, கொடிமர இல்ல சாலை உள்ளிட்ட சாலைகளில் மொத்தம் 19 திருப்பங்களுடன் சேர்தது 3.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த கார் ரேஸ் நடைபெற்றது.
பார்முலா4 இரவு நேர ஸ்ட்ரீட் கார் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தும், வெற்றியாளர்களுக்கு பரிசுகளையும் வழங்கி கவுரவித்தார். பார்முலா 4 ரேஸ் கார் பந்தயம் வெற்றிகரமாக நடத்தியதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சினிமா பிரபலங்கள் மற்றும் பல்வேறு விளையாட்டு வீரர்கள் பாராட்டியிருந்தனர்.
இந்நிலையில் பா.ஜ.க. நிர்வாகியும், பைக் ரேசிங் வீராங்கனையுமான அலிஷா அப்துல்லா அமைச்சர் உதயநிதியை பாராட்டியுள்ளார். அவர் பேசும்போது, சென்னையில் இப்போது பார்முலா 4 ரேஸ் முக்கியமா என்று பலர் கேள்வி எழுப்பிய நிலையில் ஒரு வீராங்கனையாக பார்க்கும்போது இது முக்கியம்தான் என்று பாராட்டியுள்ளார்.
ஏற்கனவே பா.ஜ.க. நிர்வாகி பார்முலா4 ரேசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நிலையில் மற்றொரு பா.ஜ.க. பெண் நிர்வாகி பாராட்டியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.