Share via:
நாடுகள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றை ஒன்றிணைக்கும் வகையிலே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியா, பாகிஸ்தான் மேட்ச் என்றால் அனல் பறக்கும் என்றாலும், மேட்ச் முடிந்ததும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி, கை கொடுத்து சகோதரத்துவம் காட்டுவார்கள்.
விராட் கோலி இருந்த வரையிலும் சகோதரத்துவம் காட்டிவந்த இந்திய அணி, இப்போது கிரிக்கெட் போட்டியை போர் போன்று நடத்திவருகிறது. பாகிஸ்தான் நாட்டில் சென்று விளையாட மாட்டோம் என்று சொன்னதைக் கூட ஏற்க முடியும். கடந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் கை கொடுக்க வந்த நேரத்தில் அதனை புறக்கணித்து அவமானப்படுத்தியது இந்திய வீரர்கள் தான்.
இதன் உச்சபட்சமாக இன்று பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து கோப்பையை வாங்காமல் புறக்கணித்து விளையாட்டை நேரடி அரசியலாக மாற்றியிருப்பது, ரசிகர்களிடம் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
ஆசியக் கோப்பை 2025 தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதின. வருகின்றன. இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அபாரமாக விளையாடத் தொடங்கினாலும் திடீரென்று படுமோசமாக சொதப்பி, 19.1 ஓவர்கள் முடிவில் 146/10 ரன்களை எடுத்தது
இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 19.5 ஓவர்களில் இலக்கை தாண்டி 150 ரன்கள் அடித்து வெற்றியை சாத்தியமாக்கியது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து ஆசியக் கோப்பையைப் பெற இந்தியா மறுத்துவிட்டது. நக்வி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும், பாகிஸ்தான் அமைச்சராகவும் உள்ளார்.
போட்டி முடிந்ததும் மேடைக்கு வந்த நக்வியிடமிருந்து கோப்பையை பெற்றுக் கொள்ள இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் நக்வி மேடையில் 20 நிமிடம் காத்திருந்தார். அதன் பின்னர் இந்திய அணி வீரர்கள் வராததால் கோப்பையையும், பதக்கங்களையும் அவரே எடுத்துச் சென்றுவிட்டார்.
இது குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறும்போது, “ஒரு அணியாக நாங்கள் (மொஹ்சின் நக்வியிடமிருந்து) கோப்பையை பெற வேண்டாம் என்று முடிவு செய்தோம். எங்களை யாரும் அப்படிச் செய்யுமாறு சொல்லவில்லை. ஆனால், போட்டியை வெல்லும் அணி கோப்பைக்கு தகுதியானது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.
இதையடுத்து ஆசியக் கோப்பை இல்லாமலே இந்திய அணியினர் கொண்டாடினார்கள். பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து கோப்பையை பெற வேண்டாம் என்று எங்களுக்கு யாரும் சொல்லவில்லை என்று அவர் மேடையில் சொன்னதே, பாஜக கொடுத்த அழுத்தம் என்றே ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள். விளையாட்டை அரசியலாக்குவது அபத்தமானது.