Share via:
மலையாள திரையுலகில் நடிகைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்து நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு நடிகைகள், நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை வெளிப்படையாக முன்வைத்து வருகின்றனர்.
மலையாள திரையுலகதைத் தாண்டிலும் இப்புகார்கள், தமிழகத்தைச் சேர்ந்த நடிகர்கள் மீதும் பாய்வது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாள நடிகர்களான ஜெயசூர்யா, சித்திக் உள்ளிட்ட நடிகர்கள் தங்களிடம் பாலியல் ரீதியதாக அத்துமீறியதாக நடிகைகள் குற்றம்சாட்டியுள்ளனர். வங்கமொழி நடிகையான ஸ்ரீலேகா மித்ரா, மலையாள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் மீது பாலியல் புகார் கூறியது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிப்படையாக குற்றம்சாட்டியது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தன் மீது குற்றம் சுமத்தப்பட்டதை தொடர்ந்து ரஞ்சித், தான் வகித்து வந்த அகாடமி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதே போல் சித்திக் தான் வகித்து வந்த நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக தலைவர் மோகன் லாலுக்கு அனுப்பி வைத்தார்.
இ¬த்தொடர்ந்து அம்மா என்று அழைக்கப்படும் அசோசியேஷன் ஆஃப் மலையாளம் மூவி ஆர்டிஸ்ட்ஸ் தலைவர் பொறுப்பில் இருந்து நடிகர் மோகன்லால் திடீரென்று ராஜினாமா செய்துவிட்டார். மேலும் பல நிர்வாகிகள் ஒன்றன் பின் ஒன்றாக தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதன் காரணமாக மலையாள நடிகர் சங்கம் முற்றிலுமாக கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஹேமா அறிக்கையின் தாக்கமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.