Share via:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து தமிழக பா.ஜ.க. அண்ணாமலை மேடையில் கடுமையாக விமர்சனம் செய்தார்.
அதாவது அவர் பேசும் போது, யாரோ ஒருவரின் காலில் தவிழ்ந்து பதவியை பிடித்த தற்குறி எடப்பாடி பழனிசாமிக்கு என்னை பற்றி பேச தகுதி கிடையாது. மேலும் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து நாற்காலியை காப்பாற்றிய எடப்பாடி பழனிசாமி என்னைப் பற்றி பேசக்கூடாது என்று கடுமையான வார்த்தைகளால் பேசியது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி குறித்த என்னுடைய வார்த்தையை திரும்ப வாங்க மாட்டேன். நான் சொன்னது 100 சதவீதம் உண்மை என்றும் தெரிவித்திருந்தார். இது அ.தி.மு.க. தொண்டர்கள் பற்ற வைத்த நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் மாறியதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் போரரட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன்படி மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அண்ணாமலையின் உருவபொம்மையை எரிப்பதும், துடைப்பம், செருப்பு உள்ளிட்டவற்றால் அடிப்பதுமாக தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக அண்ணாமலையின் ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை செருப்பால் அடித்து தங்களின் எதிர்ப்பை காட்டினர். இதற்கிடையில் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு 3 மாத மேற்படிப்புக்காக செல்லும் அண்ணாமலை தேவையில்லாமல் அ.தி.மு.க.வை சீண்டுகிறார் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
அண்ணாமலை வெறும் 3 வயது குழந்தை. இந்த குழந்தை 52 ஆண்டு அனுபவம் கொண்ட ஆலமரம் போன்று இயங்கி வரும் கட்சியை அழிக்காமல் விடமாட்டேன் என்று பேசுவது விரக்தியின் உச்சம் என்று கிண்டலடித்துள்ளார்.
ஆந்திராவில் நடைபெற்ற பணமோசடியில் அண்ணாமலையின் பெயர் அடிபடும் நிலையில், எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி இரு கட்சிகளுக்குள் மோதவிட்டு தப்பிக்கப் பார்க்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொடர்ந்து அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களை மட்டுமல்லாமல், கூட்டணியை உறுதி செய்ய வேண்டிய தலைவர்களையும் சீண்டி வருகிறார். இது பா.ஜ.க.வின் எதிர்காலத்தை தமிழகத்தில் கேள்விக்குறியாக்கி வருகிறது. மேலும் இதன் தாக்கமாகத்தான் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாமல் போனதாக அரசியல் விமர்சகர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படியாக அண்ணாமலை மற்றும் அ.தி.மு.க.வுக்கு இடையிலான வார்த்தை போர் நாளுக்கு நாள் முற்றிக் கொண்டே வருவதால், 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கேள்விக்குறி வலுத்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பா.ஜ.க. மேலிடம் எண்ணும் பட்சத்தில், இந்த 3 மாத கால இடைவெளியை பயன்படுத்தி தமிழகத்திற்கு புதிய பா.ஜ.க. தலைவரை நியமிக்கலாம். அதற்கு பின்னர் விட்டுப்போன கூட்டணி பாலத்தை மீண்டும் கட்டி எழுப்பி 2026 தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்து பா.ஜ.க.வின் ஆளுமையை தமிழகத்தில் காலூன்ற செய்யலாம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.