Share via:
தமிழக அரசை கண்டித்து நாளை (நவ.18) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
குண்டர் சட்டத்தின் கீழ் விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாய நிலங்களை ஆக்கரமிக்க முயற்சித்த தி.மு.க. அரசை கண்டித்து விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த தி.மு.க. அரசின் அடக்குமுறையை பா.ஜ.க. கண்டிக்கிறது. எனவே நாளை (நவ.18) திருவண்ணாமலையில், தமிழக பா.ஜ.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் பா.ஜ.க. தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.