News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழகத்திற்கு நரேந்திரமோடி இம்மாதம் 25ம் தேதி வரயிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் கூட்டணிக் கட்சிகள் அனைவரையும் மேடையேற்ற வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தீவிரம் காட்டிவருகிறது.

தற்போது பா.ஜ.க.வில் பன்னீர், டிடிவி.தினகரன், ஜி.கே.வாசன், ஐ.ஜே.கே.பச்சமுத்து, புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கட்சியின் சரத்குமார்,, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஆகியோர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி இன்னமும் உறுதி கொடுக்காமல் இழுத்துக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பா.ஜ.க. சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் நிற்க விரும்புபவர்கள் பட்டியல் தயாராகியுள்ளது.

தற்போது பாண்டிச்சேரி கவர்னராக இருக்கும் தமிழிசை செளந்தர்ராஜன் கட்சிப் பணிக்குத் திரும்புவதற்கே விரும்புகிறார். ஆகவே, அவருக்கு கன்னியாகுமரி தொகுதி ஒதுக்கப்படுகிறது. அதனால் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சீட் கிடையாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை மாநிலங்களவை மூலமே தேர்தலை சந்திக்காமல் மத்திய அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் இந்த முறை பாண்டிச்சேரியில் போட்டியிட இருப்பதாகத் தெரிகிறது. அதற்காகவே என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிலிருந்து விலகியிருக்கிறது.

நீலகிரி தொகுதியில் எல்.முருகன், நடிகை குஷ்பு மத்திய சென்னையிலும் போட்டியிட இருக்கிறார். கோவை தொகுதியில் ஏ.பி. முருகானந்தம், காஞ்சிபுரம் தொகுதியில் வி.பி.துரைசாமி, வட சென்னையில் கரு.நாகராஜன் ஆகியோர் போட்டியிட விரும்புகிறார்கள். இவர்களைத் தவிர தடா பெரியசாமி, வினோஜ் பி.செல்வம், பேராசிரியர் சீனிவாசன் உள்ளிட்ட சிலர் சீட் கேட்டுள்ளார்கள்.

நடிகர் சரத்குமாருக்கு திருநெல்வேலியும் கிருஷ்ணசாமிக்கு தென்காசியும் ரவி பச்சமுத்துக்கு பெரம்பலூர் தொகுதியும் ஜி.கே.வாசனுக்கு தஞ்சையும், ஏ.சி.சண்முகத்துக்கு வேலூர் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

பா.ம.க.வின் இருதி முடிவுக்குப் பிறகே முறைப்படி கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய இடங்கள் ஒதுக்கப்படுமாம். எப்படியும் 20 தொகுதிகளில் பா.ஜ.க. நிற்பதில் உறுதியாக இருக்கிறதாம்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link