Share via:
அரசியலில் காமெடி செய்வதில் அ.தி.மு.க.வினரை யாரும் அடித்துக்கொள்ளவே
முடியாது. செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி என்று ஆளாளுக்கு
அவ்வப்போது குண்டக்க மண்டக்க பேசி நிறைய கண்டெண்ட் தருவார்கள்.
அந்த வகையில் இப்போது மதுரை வேட்பாளர் சரவணன் சேர்ந்திருக்கிறார்.
ரொம்பவும் புத்திசாலி போன்று கையில் பைனாகுலர் வைத்துக்கொண்டு, ‘மதுரை எம்.பி. வெங்கடேசன்
என்ன செய்தார் என்று தேடித் தேடிப் பார்க்கிறேன், எதுவுமே தெரியவில்லை’ என்று மேடையில்
ஏறி பேசினார்.
அந்த நேரத்தில் அவர் பைனாகுலர் மூடியை கழட்டவே இல்லை என்பது அத்தனை
பார்வையாளர்களுக்கும் தெரிந்தது. ஆனாலும், யாரும் அவரிடம் அதை சுட்டிக் காட்டாத காரணத்தால்
தொடர்ந்து அதை வைத்து காமெடி செய்துகொண்டிருந்தார்.
இப்போது சரவணனிடம் மதுரை மக்கள் ஒரே ஒரு சத்தியம் கேட்கிறார்கள்.
அதாவது, இந்த கட்சியிலாவது கடைசி வரையிலும் இருப்பேன் என்று சொல்ல முடியுமா என்று அவரிடம்
கேட்டிருக்கிறார்கள்.
பல்டி அடிப்பதில் மன்னனான சரவணன் இதுவரை ம.தி.மு.க.வில் ஒரு முறை
அ.தி.மு.க.வில் இரண்டு முறை, தி.மு.க.வில் இரண்டு முறை, பா.ஜ.க.வில் ஒரு முறை என்று
பல்டி அடித்தவர். அதோடு மக்கள் மருத்துவர் என்றெல்லாம் கூறி அரசு காப்பீட்டு பணத்தைக்
கொள்ளையடித்தவர்.
எனவே இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கணும்னு நினைச்சா,
‘இனி கடைசி வரையிலும் அ.தி.மு.க.வில் இருப்பேன்’ என்று சத்தியம் செய்துகொடுங்கள்’ என்று
கேட்கிறார்கள்.
அதுசரி, அவர் எங்கே எப்போ இருப்பாருன்னு அவருக்கே தெரியாதே.