Share via:
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். எப்படியும் வெற்றி பெற்று இந்தியாவுக்கு தங்கம் வாங்கித் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற எடை பரிசோதனையில் அவர், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு நொறுங்கியது. அதைவிட, அத்தனை கோடி இந்தியர்களின் கனவும் சுக்கு நூறாகிவிட்டது.
ஒரே நாளில் 4 கிலோ வரையிலும் எடை குறைக்க முடியும் என்று மல்யுத்த வீரர்கள் கூறிவரும் நேரத்தில், குறிப்பிட்ட எடைக்குள் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவரைச் சுற்றி சதி வலைகள் பின்னப்பட்டதும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகும் அவருக்காக இந்தியா குரல் கொடுக்காததும் இப்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பா.ஜ.க. பிரமுகர் மீது குற்றச்சாட்டு முன்வைத்து போராடிய வினேஷ் போகத் வெற்றி பெற்று பிரதமர் முன்பு நின்றுவிடக் கூடாது என்பதற்காகவே இப்படி சதி வலை செய்யப்பட்டதாக பேசுபொருளாகிவிட்டது.
இது உண்மையோ பொய்யோ, ஒரு நாட்டின் பிரதமரை அந்த நாட்டு மக்களே சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் வகையில் பா.ஜ.க. அரசு நடந்துவருவது மகா அவமானம்.
இந்தியா கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தால் வென்ற வெள்ளிப் பதக்கத்தையாவது மீட்டிருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. வேண்டுமென்றே சட்ட நடவடிக்கைகளை தாமதப்படுத்திவிட்டார்கள். அதோடு இந்த முறை ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களும் குறைந்துள்ளன. இந்தியா தன்னை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.
ஜெயித்தாலும் தோற்றாலும் வினேஷ் போகத் இந்தியாவுக்குத் தங்க மகள் தான்.