11-வது புரோ  கபடி  லீக்  போட்டி  தெலுங்கானா  மாநிலம்  ஐதராபாத்தில்  கடந்த மாதம் 18-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்தத் தொடரில் மொத்தம்  12  அணிகள்  களமாடியுள்ளன .  இதில்  ஒவ்வொரு அணியும்  தலா  22  ஆட்டத்தில்  விளையாட  வேண்டும் .

இந்தநிலையில் , இந்த தொடரில் இன்று 2 கட்ட லீக்  ஆட்டங்கள் நடைபெறுகிறது.

நேற்று  மும்பா – அரியானா  அணிகள்  மோதின . ஆட்டத்தின் ஆரம்பம்  முதலே  இரு  அணி  வீரர்களும்  மாறி  மாறி  புள்ளிகள் எடுத்தனர் .  தொடக்கம்  முதலே  பரபரப்பாக  நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இறுதியில் 48-39 என்ற புள்ளிக்கணக்கில்  மும்பாவை வீழ்த்தி அரியானா வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து  இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது . அதில் பெங்களூரு புல்ஸ்- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் ( இரவு 8 மணி ), தபாங் டெல்லி- புனேரி பால்டன ( இரவு  9 மணி ) அணிகள் போட்டியிடுகின்றன .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link