News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி என்பது தி.மு.க.வின் ஜால்ராவாக மட்டுமே இருந்துவருகிறது. இன்றைய அரசியல் சூழலில் வேறு வழியில்லை என்றாலும், கட்சியை வளர்ப்பதற்கு ராகுல் பல்வேறு முயற்சிகள் செய்துவருகிறார். இந்த வகையில், கட்சியின் சார்பில் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

அப்படி தமிழகத்திற்கு நியமனம் செய்யப்பட்டிருப்பவர் பவ்யா நரசிம்மமூர்த்தி. கர்நாடகத்தை சேர்ந்த பெங்களூரைச் சேர்ந்தவர். புகழ்பெற்ற எஸ்.எஸ்.ராமையா கல்லூரியில் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் புகழ்பெற்ற கொலம்பியா பல்கலையும் முதுகலை பட்டம் பெற்றவர்.

அமெரிக்காவில் பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றிய பதவியை உதறிவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர். பா.ஜ.க. கொண்டுவந்த சி.ஏ.ஏ. சட்டத்துக்கு எதிராக முக்கிய குரலாக ஒலித்த போது கவனம் பெற்றவர் அவரின் அசாத்திய திறமையை அங்கீகரித்து தமிழக காங்கிரஸ் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளது காங்கிரஸ் கட்சி.

தமிழகத்தில் குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்ததற்குப் பிறகு ஒரு அழகுப் பெண் முக்கியப் பொறுப்புக்கு வந்திருக்கிறார். தி.மு.க.வின் பக்கத்தில் காங்கிரஸ் இருந்தால் வளரவே செய்யாது என்பதால், அதை மீட்டெடுக்கும் முயற்சியில் இளம் பெண் ஒருவரை காங்கிரஸ் கட்சி நியமனம் செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கென இயங்கும் பிரியதர்ஷினி அமைப்புக்கு முக்கியப் பொறுப்பாளரான இவரது முதல் பணி கே.எஸ்.அழகிரியின் பதவி பறிப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தபடியாக தமிழக காங்கிரஸ் கட்சிக்கு இளம் ரத்தத்தை புகுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே, கார்த்தி சிதம்பம், செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர் ஆகியோர் முட்டி மோதிக்கொண்டு இருக்கிறார்கள். யாருக்கு லக் அடிக்கிறது என்று பார்க்கலாம்.

வாங்க பவ்யா வாங்க… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link