Share via:
கடலூர் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடமான தேவானம்பட்டினம் சில்வர் பீச்சில் ‘நெய்தல் புத்தக திருவிழா’ நாளை மறுநாள் (செப்.29) நடைபெற உள்ளது.
அக்டோபர் மாதம் 8ம் தேதி நடைபெற உள்ள இந்த புத்தக திருவிழாவிற்காக சில்வீர் பீச்சில் திறந்த வெளியில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கலை, இலக்கியம், சிறுகதை, கவிதை, ஆராய்ச்சி, குழந்தைகள் வாசிப்பதற்கென தனி புத்தகங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு பதிப்பதகத்தார் தங்களின் புத்தகங்களை கண்காட்சியில் காட்சிப்படுத்துகின்றனர். மேலும் 80க்கும் மேற்பட்ட புத்தக விற்பனையாளர்களும் புத்தக திருவிழாவில் பங்கேற்க உள்ள நிலையில் 10 சதவீத தள்ளுபடியையும் அறிவித்துள்ளது புத்தக வாசிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புத்தக திருவிழாவை முன்னிட்டு கடலூர் சில்வர் கடற்கரையில் நாளை மறுநாள் முதல் (செப்.29) அக்டோபர் 9ம் தேதி வரையிலான 11 நாட்களுக்கு குளிக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென்னாடு மாவட்டத்திலிருந்து கடலூர் மாவட்டம் பிரிந்து 30 ஆண்டுகள் நிறைவை ஒட்டி புத்தகக் கண்காட்சியுடன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் பொருள்காட்சிகளும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.