News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் என்றாலும், இந்த பதவியை வைத்துக்கொண்டு தனியே ஒரு கல்வி நிறுவனமே நடத்தியதாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருந்தன. ஆனாலும், தன்னுடைய மேலிடத் தொடர்புகள் மூலம் தப்பிக்கொண்டே இருந்தார்.

துணைவேந்தர் ஜெகநாதன் அரசு அதிகாரியாக இருந்துகொண்டு விதிகளை மீறி நிறுவனம் தொடங்கி, பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்த நிறுவனத்தை செயல்பட வைத்ததும், அதன் மூலம் அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதனை கருப்பூர் போலீஸார் புதன்கிழமை) இரவு கைது செய்யப்பட்டார்.

ஜெகநாதனை போலீஸ் காவலில் எடுத்து, அவர் செய்திருக்கும் அத்தனை ஊழல்களையும் அம்பலத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பி வந்தார்கள்.

இந்த நிலையில் சேலம் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன் ஜெகநாதன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 7 நாட்கள் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இந்த 7 நாட்களும் அவர் சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

ஊழல் குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் உடனடியாக ஜாமீனில் விடப்பட்டுள்ளது, சமூக ஆர்வலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link