Share via:
வெற்றிமாறன் உதவி
இயக்குநர் வர்ஷா பரத் இயக்கியிருக்கும் ‘பேட் கேர்ள்’ படத்தில் ஹிருது ஹாரூன், சாந்தி
பிரியா, அஞ்சலி சிவராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை வெற்றிமாறனின் தயாரிப்பு
நிறுவனம் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கிறது. பிராமணப் பெண்களை அவமானப்படுத்துவதால்,
இந்த படத்தை தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த படத்தின் டீஸர்
மற்றும் டிரெய்லரில் பள்ளி வயதினரின் சேட்டைகள் காட்டப்படுகின்றன. வீட்டில் கட்டுப்பாடுகள்
விதித்தால் பெண் பிள்ளைகள் எப்படியெல்லாம் எதிர்வினையாற்றுவார்கள் என்பதை ஒரு பெண்
இயக்கியிருக்கிறார். இந்த நிலையில், தற்கொலை வசனங்களுடன் பள்ளி குழந்தைகளை பாலியல்
ரீதியாக சித்தரிக்கும் சமூக விரோத படத்துக்கு எதிராக தமிழக காவல்துறை போக்சோ சட்ட நடவடிக்கை
எடுக்க வேண்டும். சமூக வலைதளத்தில் இந்த படக்காட்சிகளை உடனே நீக்க வேண்டும் என்று பலரும்
எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
பா.ஜ.க. ஆதரவாளர்கள்,
‘’ரஞ்சித், வெற்றிமாறன், விஜய்சேதுபதி வீட்டு பெண்குழந்தைகள் BADGIRL ஆக இருக்க அனுமதிப்பார்களா?
பள்ளிமாணவிகள் சிறுமிகள் அவர்களுக்கு பாலியல் சுதந்திரம்,முற்போக்கு எனும்பெயரில்
BADGIRL திரைப்படம் முன்னோட்டம் பார்த்து அதிர்ச்சி! போக்சோ சட்டப்படி இப்படத்தை தயாரித்த,இயக்கிய,நடித்த
அனைவரையும் கைது செய்ய வேண்டும். இந்து, தமிழ், பிராமண குடும்ப பெண் குழந்தைகளை குறிவைத்து
கேவலப்படுத்தும் இப்படத்தை தடை செய்ய வேண்டும்.
சமூகத்தில் ஆண் போல
பெண்ணும் சுதந்திரமாக செயல்பட உரிமை கொண்டவள் என்ற கருத்தைச் சொல்லும் படம் என்றாலும்,
வெளிப்படையாக பெண்ணின் சாதியைக் காட்டவேண்டிய அவசியமென்ன? எற்கனவே சமூக வலைதளங்களால்
இளைஞர்கள் சீரழிகிறார்கள், இதில் இப்படி ஒரு சாக்கடை படம்’’ என்று கடும் விமர்சனம்
வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் பா.ஜ.க.வின்
நாராயணன் திருப்பதி, ‘’‘Bad girl’ என்று ஒரு சமூகத்தை உருவகப்படுத்தி அவதூறு செய்யும்
‘சமூக விரோதிகளை’ புறந்தள்ளுவோம். ஒரு சமூகத்தை இழிவுபடுத்தினால் தான் அவர்கள் பிழைக்க
முடியும் என்று எண்ணுகிறார்கள். அவர்கள் ‘Saddists’ என்ற வக்கிர புத்தி கொண்டவர்கள்.
எப்படி வேண்டுமானாலும் பிழைக்கலாம் என்ற தரம் தாழ்ந்த எண்ணம் கொண்டவர்கள்’’ என்று கூறியிருக்கிறார்.
போகிற போக்கைப் பார்த்தால்
படத்துக்கு செம பப்ளிஸிட்டி கிடைக்கும் போலியிருக்கிறது.