Share via:
பிரபல இயக்குனர் தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதாக இணையத்தில் பதிவிட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘நேரம்’ இத்திரைப்படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். அதைத்தொடர்ந்து 2015ம் ஆண்டு ‘பிரேமம்’ திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, யார் இந்த இயக்குனர் என்று பிரபலமானார். இத்திரைப்படத்தில் நிவின்பாலி, சாய் பல்லவி நடித்தது ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் டிரெண்டிங்கில் உள்ளது. அதில் நடிகை சாய் பல்லவியின் கதாபாத்திரமான ‘மலர்’ இன்றளவும் பேமஸ்தான்.
அதைத்தொடர்ந்து 7 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் ‘கோல்டு’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று சற்று பின்னடைவை சந்தித்தார்.
இதற்கிடையில் புதிய படத்திற்கான அறிவிப்பை அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்ட நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதாகவும், சினிமாவில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் வீடியோக்கள், குறும்படங்களை இயக்கி ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சி செய்வேன் என்று கூறிய அவர், சினிமாவில் என்னால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுக்க நான் விரும்பவில்லை’’ என்று பதிவிட்டிருந்தார்.
இதை பார்த்த ரசிகர்கள் அல்போன்ஸ் புத்திரனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த சில நிமிடங்களில் அவர் தனது இன்ஸ்டா பதிவை டெலிட் செய்துவிட்டார். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். உண்மையில் இவருக்கு ஆட்டிசம் நோய் உள்ளதா? அல்லது புது படத்தை பிரமோட் செய்வதற்கான யுக்தியா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

