Share via:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திருச்சியியில் இன்று நடைபயணத்தை
தொடங்கியிருக்கிறார். 82 வயதில் வைகோ மேற்கொள்ளும் 8வது நடைபயணம் என்பது குறிப்பிட்டத்தக்கது
முதல்வர் ஸ்டாலின் இந்த நடைப்பயணத்தை தொடங்கிவைத்தார். இன்று முதல் 12-ம் தேதி வரையிலான
இந்த நடைப்பயணத்தில் வைகோவுடன் 950 பேர் பங்கேற்கிறார்கள்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு
எதிராக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சமத்துவ நடைப்பயணத்தை நடத்துவதாக
வைகோ கூறினாலும், திமுக கூட்டணியில் இரட்டை இலக்க எண்களில் சீட்களை பெற தனது கட்சியின்
வலிமையை திமுகவுக்கு காட்ட வைகோ இந்த நடைப்பயணத்தை நடத்துவதாக கூறப்படுகிறது.
திமுகவைப் பொறுத்தவரை இந்த தேர்தலில் 170 தொகுதிகளில் போட்டியிட
திட்டமிட்டுள்ளது. அப்படி போட்டியிட்டால் கூட்டணி கட்சிகளுக்கு அது 64 இடங்களை மட்டுமே
ஒதுக்கும். ஒரு சில கட்சிகள் திமுக கூட்டணியில் இணைய திட்டமிட்டுள்ளதால் மதிமுகவுக்கு
இரட்டை இலக்கத்தில் அவர்கள் சீட் ஒதுக்குவதற்கு வாய்ப்பில்லை.
கடந்த முறை திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் வழங்கப்பட்டிருந்தது.
நான்கு தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே, இந்த முறை சீட் குறைக்க வாய்ப்புண்டு
என்று பேச்சு எழுவதால், தங்களுக்கு குறைந்தபட்சம் 8 சீட்டாவது பெற வேண்டும் என்பதற்காகவே
இந்த நடை பயணத்தை வைகோ மேற்கொள்கிறார்.
நடைப்பயண துவக்க விழா அழைப்பிதழ் முன் அட்டையில், மறைந்த விடுதலைப்புலிகளின்
தலைவர் பிரபாகரன் படம் இடம் பெற்றிருந்தது. இது காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிருப்தியைக்
கிளப்பியது. அதேபோல் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் வெளிநாடு சென்றிருந்ததால் அவரும்
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
வைகோ பேசும்போது, “சங்க காலத்தில் ஜாதிகள் கிடையாது. வடபுலத்திலேயே
மதச்சண்டைகள் நடந்தபோதும், காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோதும் தமிழகத்தில் நல்லிணக்கம்
நீடித்தது. அத்தகைய சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், தமிழகத்தில் சமய சண்டைகளுக்கு
என்பதை நிலைநாட்டுவதற்காகவே, அதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவே நானும்
என் தம்பிமார்களும் இந்த நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளோம்” என்றார்.
முந்தைய காலகட்டங்களில் தேர்தலுக்கு முந்தைய மாதம் வரை ஒரு கூட்டணியில்
இருந்து அவர்களை ஆதரித்து பேசி, கடைசி கட்டத்தில் அந்த கூட்டணியில் இருந்து விலகுவதை
வைகோ வழக்கமாக கொண்டிருக்கிறார். இப்போது கமல்ஹாசன் கூட்டணிக்குள் வந்திருப்பதால் மதிமுக
விலகினாலும் பாதிப்பு இல்லை என்ற மனப்பான்மையிலே ஸ்டாலின் இருக்கிறார்.
எனவே தங்கள் பலத்தைக் காட்ட நினைக்கிறார் வைகோ. எட்டு சீட்டு இல்லேன்னா
எதுவும் நடக்கலாம்.