News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ஆசிய விளையாட்டு போட்டியில் சக வீராங்கனை மீது இந்திய வீராங்கனை சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியது பெரும் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.


சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்திய அணி பதக்கங்களை வாரி குவித்து வருகிறது. அதன்படி இந்தியா இதுவரை 13 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களை பெற்று சிலநாட்களாகவே 4வது இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது.


இந்நிலையில் 800 மீட்டர் ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனை நந்தினி அகசரா வெண்கலப் பதக்கம் பெற்றார். இதற்கு 4ம் இடம் பிடித்த இந்திய வீராங்கனையான ஸ்வப்னா பர்மன் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதாவது வெண்கலம் வென்ற நந்தினி ஒரு திருநங்கை என்பதால், விதிப்படி எனக்குத்தான் பதக்கம் கிடைக்க வேண்டும் என ஸ்வப்னா பர்மன் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.


இந்தியா ஆசிய விளையாட்டு போட்டிகளில் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் போது இந்திய வீராங்கனை சக வீராங்கனை மீது குற்றம் சுமத்தியுள்ளது விளையாட்டுத்துறை மற்றும் வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link