News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நேற்று முன்தினம் தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தங்கம், வெண்கலம், வெள்ளி என பதக்கங்களை குவித்து வருகிறது.

சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் 9வது ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் கோலாகலமாக ஆரம்பமானது. இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

பதக்கப்பட்டியலை பொறுத்தவரையில் இந்தியா தனது வெற்றிக்கொடியை நாட்டும் என்பதற்கு அடித்தளமாக 2வது நாளான நேற்று 5 பதக்கங்களை கைப்பற்றியது. அதன்படி இந்தியவுக்கான முதலாவது பதக்கம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனைகளால் கிடைத்தது. பெண்கள் அணிக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் 1,886 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்றது. அதேபோல் படகுப் போட்டியில் இந்தியா 3 பதக்கங்களை குவித்தது.

மேலும் 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் அணி போட்டியில் இந்தியா வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது. 50 மீட்டர் நீச்சல் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளதால் மேலும் ஒரு தங்கப்பதக்கம் இந்தியாவுக்கு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link